ஆயிரம் கடவுள்களின் பெயர்கள் நம் நாட்டிலே வழங்கப்படினும் தமிழில் 'முருகன்' என்ற பெயருக்கு என்றுமே ஒரு தனி இடம் இருக்கத் தான் செய்கின்றது. எங்கெங்கெல்லாம் தமிழர்கள் இருக்கின்றனரோ அங்கெல்லாம் முருகன் இருப்பான். தமிழர்களுக்கேன்றே சிறப்பாய் இருக்கும் ஒருவன் அவன். அழகன் அவன்... தமிழ் கடவுளும் அவன். இன்னும் கூறிக் கொண்டே போகலாம். முருகனும் தமிழும் என்றுமே முடிவில்லாதவர்கள்...அவர்களைப் பற்றிப் பேசினால் பேசிக் கொண்டே போகலாம். இப்பொழுது நம்முடைய பயணத்தில் அவர்களைத் தான் காண வேண்டி இருக்கின்றது. காரணம் சில ஆராய்ச்சியாளர்கள் இயேசு தான் தம்பி தமிழகத்தில் முருகனாக விளங்கிக் கொண்டு இருக்கின்றார் என்று கூறுகின்றார்கள். எவராலும் எளிதில் நம்ப முடியாத கூற்று தான் அது. இருந்தும் சற்று நிதானமாய் சிந்தித்துப் பார்க்கையில் அவர்களின் அந்தக் கூற்றினை ஒதுக்கி விட இயலவில்லை."அட என்னங்க... அங்கே இயேசு சிலுவையின் ஒரு பகுதியினை மக்களுக்காக சுமந்து சென்றார் சரி. பிரச்சனை இல்லை. ஆனால் அந்த செயலை எண்ணித் தான் நம் நாட்டில் முருகப்பெருமானுக்கு காவடி எடுக்கிறார்கள் என்று நீங்கள் கூறுவது எப்படிங்க சரியாகும். அப்படினா உலகத்துல எந்த இடத்துல மரக்கட்டையை சுமந்து சென்றாலும் அது இயேசுவை எண்ணியே சுமந்து செல்லுகின்றார்கள் அப்படின்னு சொல்ல முடியுமா" என்ற எண்ணம் பலரின் மனதிலும் நிச்சயம் வந்து இருக்கும்.


நியாயமான கேள்வி தான். இக்கேள்விக்கு பதிலினைக் காண நாம் முதலில் காவடியினைக் பற்றியும் அதன் வரலாற்றினைப் பற்றியும் பார்க்க வேண்டி இருக்கின்றது.


காவடி என்பது முருகனுக்கே உரிய வழிப்பாட்டு முறைகளில் ஒன்று என்பதனை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் எதற்காக காவடி எடுக்கின்றார்கள்? காவடி ஆட்டத்தின் வரலாறு என்னவென்று பார்த்தோம் என்றால் ஒரு கதை நம் புராணங்களில் இருந்து நமக்கு விடையாய் கிடைக்கின்றது.

அதாவது அகத்திய முனிவர் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வரும் பொழுது அங்கிருந்து இரு மலைகளை அவருடனேயே எடுத்து வர எண்ணுகின்றார். அதற்காக அவருடைய சீடனாகிய இடும்பன் என்ற அசுரனைப் பணிக்க, அவனும் அந்த மலைகளை சுமந்துக் கொண்டு தெற்கே வருகின்றான். இதே நேரத்தில் தான் பிள்ளையாருக்கும் முருகனுக்கும் இடையே பழப் பிரச்சனை உருவாக முருகனும் கோபத்தோடு தெற்கே வருகின்றார். இந்நிலையில் இடும்பன் தான் ஓய்வு எடுக்க எண்ணி மலைகளை கீழே இறக்கி வைத்து விட்டு சற்றே கண் அயருகின்றான். ஆனால் சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் மீண்டும் மலைகளை தூக்க அவன் முயற்சிக்கையில் ஆச்சர்யமே அவனுக்கு காத்து இருக்கின்றது. இப்பொழுது அவனால் அந்த மலைகளைத் தூக்க முடியவில்லை. ஏன் அந்த மலைகளைத் தூக்க முடியவில்லை என்று அவன் சிந்திக்கும் பொழுது மலையின் மேல் ஒரு சிறுவன் வீற்று இருப்பதை காணுகின்றான். அந்தச் சிறுவனால் தான் அந்த மலைகளை தன்னால் தூக்க இயலவில்லை என்று எண்ணிய இடும்பன் அந்த சிறுவனை மலையில் இருந்து இறங்குமாறு சொல்ல சிறுவன் மறுக்கின்றான். இடும்பன் ஆத்திரப்படுகின்றான். சிறுவனைத் தாக்கவும் செய்கின்றான். ஆனால் அப்பொழுது நிலவிய சண்டையில் சிறுவனே வெல்லுகின்றான். எவ்வாறு தான் ஒரு சிறுவனிடம் தோற்றோம் என்று இடும்பன் சிந்திக்கும் பொழுது தான் அந்த சிறுவன் அவனது விருப்ப தெய்வமான முருகன் என்று அவன் அறிகின்றான்...அறிந்து முருகனிடம் இரு வரங்களைக் கோருகின்றான். ஒன்று...இடும்பனைப் போல் யார் காவடி தூக்கிக் கொண்டு வந்தாலும் முருகன் அவர்களை வாழ்த்த வேண்டும். இரண்டு முருகனுடன் போரிட்ட அந்த மலைக்கு இடும்பன் காவலாளியாக என்றென்றும் திகழ வேண்டும். முருகனும் அந்த வரங்களை அருள்கின்றார். அன்று ஆரம்பித்தது தான் மக்கள் முருகனுக்காக காவடி எடுக்கும் வழக்கம். இது தான் நம் புராணங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் கதை. நிற்க.

இப்பொழுது நாம் ஆய்வாளர்களின் கூற்றுகளைப் பார்ப்போம். அதற்கு நாம் காவடி என்ற சொல்லைப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

'காவடி' என்பது ஒருத் தனிச் சொல்லே அல்ல. மாறாக இரு சொற்களின் சேர்க்கைத் தான் காவடி என்ற ஒரு சொல்லாக மாறி இருக்கின்றது. அதாவது,

'காவு+தடி' என்ற சொற்களே மருவி 'காவடி' என்று மாறி இருக்கின்றன.

காவடி = காவு+தடி

காவு என்றால் பலி அல்லது மரணம் என்றுப் பொருள்படும். இந்நிலையில் காவுத்தடி என்பது பலிகொடுக்கப்படும் தடி அல்லது உயிரினைப் பறிக்கும் தடி என்றே பொருள் தருகின்றது. ஆனால் நாம் நம்முடைய புராணக் கதையினைக் கண்டோம் என்றால் காவடி என்ற சொல்லின் அர்த்தத்திற்கு அக்கதை பொருந்துகின்றதா என்றால் இல்லை என்பதே பதிலாக வருகின்றது. இந்நிலையில் முருகனுக்கு காவடி எடுப்பதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.


அதாவது 'இறைவனின் பிள்ளையை' வேண்டி மக்கள் உயிரினைப் பறிக்கும் தடியினை ஏந்திக் கொண்டு மலை ஏறுகின்றனர். இச்செயலுக்கு பொருத்தமான வேறு காரணங்கள் கிடைக்குமா என்று பார்த்தோம் என்றால் இயேசு உயிர் பறிக்கும் கட்டையினை சுமந்து கொண்டு மக்களுக்காக மலையினை ஏறி இருக்கின்றார் என்ற செய்தி நமக்கு கிடைக்கின்றது. இவ்விரண்டு விடயங்களும் ஒன்றினைப் போலவே இருக்கின்றன. ம்ம்ம்ம்...இந்நிலையில் ஏன் இவ்விரண்டு விடயங்களுக்கும் தொடர்பு இருக்க கூடாது என்ற எண்ணத்திலும் நாம் பார்க்க வேண்டி தான் இருக்கின்றது.


மக்களுக்காக இறைவனின் மகன் உயிர்பறிக்கும் கட்டையினை சுமந்துக் கொண்டு சென்று இருக்கின்றார். அவரின் அந்த தியாகத்தை நினைவுக் கூர மக்கள் அவர் சுமந்தவாறே ஒரு கட்டையினை அவரை நினைத்து சுமந்து கொண்டு இருக்கின்றனர். ம்ம்ம்... பொருந்தத் தான் செய்கின்றது. மேலும் நாம் முன்னர் கண்ட சில பதிவுகளின் படி,


௧) இன்று நம்மிடையே இருக்கும் முருகன் வழிப்பாட்டுக்கும் சங்க இலக்கியங்களில் காணப்படும் வழிப்பாட்டு முறைக்கும் மிகுந்த வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இன்றைக்கு முருகனுக்கு பலி இடும் பழக்கம் கிடையவே கிடையாது. ஆனால் சங்க இலக்கியத்தில் முருகனுக்கு பலி இருந்து இருக்கின்றது.

௨) மேலும் கடவுளின் பிள்ளை என்ற ஒரு கோட்பாடே சங்க இலக்கியத்திலும் சரி அதற்கு முந்தைய இலக்கியங்களிலும் சரி காணப்படவில்லை. முருகன் குறிஞ்சி நிலக் கடவுளாகவே அறியப்பட்டு உள்ளான்.

௩) மேலும் நாம் மேலே கண்ட புராணக் கதைகளை பற்றிய குறிப்புகளும் சரி காவடி ஆட்டமும் சரி கி.மு வில் மக்களிடையே இருந்ததிற்கான சான்றுகள் இதுவரை கிட்டவில்லை. இக்கதைகள் எல்லாம் பிற்காலத்திலேயே கிடைக்கப் பெறுகின்றன.


என்றே அறியப் பெறுகின்றோம்.

அதாவது கிருத்து காலத்திற்கு பின்னரே நம்மிடையே காவடி ஆட்டத்தினைப் பற்றியக் குறிப்புகள் கிடைக்கப் பெறுகின்றன. மேலும் முருகனுக்குரிய வழிப்பாட்டு முறைகளும் மாறி இருக்கின்றன. அதாவது குறிஞ்சி நிலத்திற்கு மட்டும் தலைவனாக சங்க இலக்கியங்களில் சித்தரிக்கப்பட்ட முருகன் இறைவனின் மகனாக அனைவருக்கும் பொதுக் கடவுளாக பிற்காலத்திலேயே அறியப்படுகின்றான். இந்த மாற்றமும் ஏன் என்று சிந்திக்கத்தக்க ஒன்றாக இருக்கின்றது.


எனவே இந்நிலையில் இயேசுவே தமிழகத்தில் முருகனாக சித்தரிக்கப்பட்டு இருக்கலாம் என்ற கருத்தினை நாம் முற்றிலுமாக மறுக்க போதுமான சான்றுகள் நம்மிடையே கிட்டப் பெறவில்லை. அதுவும் நம்முடைய பதிவுகளின் படி விவிலியத்தில் சிவலிங்க வழிப்பாடு காணப்படுவதாலும் சரி சிவனின் பிள்ளை தான் இயேசு என்றுக் கூறும் நிலையினாலும் சரி இயேசுவே முருகன் என்றக் கருத்து வலுப்பெறத் தான் செய்கின்றது.


ஆனால் வெறும் காவடியினை வைத்துக் கொண்டு இயேசு தான் முருகன் என்று நாம் கூற இயலாது. அது தகுந்த ஒன்றாகவும் இருக்காது. மேலும் முருகன் தமிழ் கடவுளாக தமிழர்களின் மத்தியில் மட்டுமே சிறப்பாக விளங்குகின்றார்.


இந்நிலையில் இயேசு தான் முருகன் என்று ஆய்வாளர்கள் கூறுவதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றனவா?. முருகன் ஏன் தமிழ் கடவுளாக அறியப்படுகின்றான்? என்றக் கேள்விகளுக்கு நாம் விடையினை தேடத் தான் வேண்டி இருக்கின்றது.


தேடுவோம்...!!!

முருகன் இருக்க பயமேன்!!!

18 கருத்துகள்:

முருகர் கடவுள் மகன், பிறப்பு போன்றவை கி.மு.1000த்தின் வால்மீகி இராமாயணத்தின் பாலகாண்டத்தில் உள்ளவை. பல சமஸ்க்ருத புராணங்களில் உள்ளதை இந்த இணைப்பில் காணலாம். முருகர் வழிபாட்டின் அனைத்து அம்சங்களும்- அதாவது வேலும் மயிலும் உடைய முருகர் காசு கி.மு. 200ச் சேர்ந்ததும் உள்ளது.
http://en.wikipedia.org/wiki/Vel
http://murugan.org/research/seth.htm#.UDLtwvbmOXk
http://murugan.org/research/janaki.htm#.UDLtfPbmOXk
http://en.wikipedia.org/wiki/Murugan
புதிய ஏற்பாட்டின் இயேசு கடவுள்-கடவுள் மகன் கோட்பாடு வந்தடு 4 ௫ம் நூற்றாண்டில் தான். எனவெ தவறான முறையில் இக்கட்டுரை, இவ்வாறு சொன்ன ஆய்வாளர்கள் யார்? யார்? இணைப்பு தாருங்கள்

நண்பருக்கு வணக்கங்கள்

//முருகர் கடவுள் மகன், பிறப்பு போன்றவை கி.மு.1000த்தின் வால்மீகி இராமாயணத்தின் பாலகாண்டத்தில் உள்ளவை. பல சமஸ்க்ருத புராணங்களில் உள்ளதை இந்த இணைப்பில் காணலாம்.//

ராமாயணத்தின் காலம் குறித்து இன்னும் சர்ச்சைகள் இருக்கின்றனவே ஐயா...மேலும் கி.மு இரண்டாம் நூற்றாண்டு வரை சமசுகிருதம் இந்த உலகினில் இருந்தமைக்கு சான்றுகள் இதுவரை ஏதும் கிட்டப்படவில்லையே. பார்க்க இணைப்புகள்

http://thamilargal.blogspot.in/2009/04/blog-post_17.html
http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/06/32.html

//முருகர் வழிபாட்டின் அனைத்து அம்சங்களும்- அதாவது வேலும் மயிலும் உடைய முருகர் காசு கி.மு. 200ச் சேர்ந்ததும் உள்ளது.//
முருகன் சங்க இலக்கியங்களில் குறிஞ்சி நிலக் கடவுளாகவே அறியப்பட்டு உள்ளான். மேலும் குறிஞ்சி நில பறவையாக மயிலும் அறியப்படுகின்றது. இதனைத் தவிர்த்து இன்று நாம் காணும் முருகனுக்கும் சங்க காலத்தில் காணப்படும் முருகனுக்கும் தொடர்புகள் பெருமளவு இல்லையே ஐயா. அப்படி தொடர்புகள் இருந்தால் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். நானும் அறிந்து என் கருத்துக்களைத் திருத்திக் கொள்வேன்.

http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/07/blog-post_28.html

நீங்கள் இரண்டு கோட்பாடுகளை எடுத்து ஆராயும் போது இரண்டிலும் நடுநிலை அறிஞர்கள் பெரும்பாலோர் ஏற்றவற்றை அடிப்படையாக பொருத்த வேண்டும். உலகப் பல்கலைக் கழகங்கள் ஹார்வர்ட், ஆக்ஸ்போர்ட் போன்றவை ஏற்பது பாரதம் முழுவதும் பேசிய மொழி வடமொழி, இதை நாம் அச்ப்ப்கர் கல்வெட்டுகளினாலும் அறியலாம். மைசூர் தமிழ் கல்வெட்டு தவிர மீதம் அனைத்தும் வடமொழி தான். தமிழில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தும் பேச்சு- உரைநடையில் தான் உள்ளது. செய்யுள் தமிழில் இல்லை. வடமொழியின் பேச்சு வடிவம் ப்ராக்ருதம், பாலி ஆகும், செம்மை செய்யப்பட்ட செய்யுளியல் வழக்கு சமஸ்க்றுதம் ஆகும். அசோகர் கல்வெட்டுகள் சமஸ்க்ருதத்தில் அமைக்கப்பட்டு, பின் ப்ராக்ருதத்தில் எழுதப்பட்டுள்ளது. அசோகர் கல்வெட்டுகளை நம்க்குப் படித்து பொருள் தந்த அறிஞர் பெருமக்கள்- சமஸ்க்ருதத்தில் மொழிபொருத்தி ஏற்றுத் தான் இதை டெசிபர் செய்தனர்.

பெரியார்-இந்தக் கும்பல் கூற்றை நாம் பார்க்கவேண்டியதே இல்லை. //வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை(1.6.50)யில் பெரியார்
தமிழின் பெயரால் பிழைப்பு
நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், ‘தமிழைக் காக்க வேண்டும்’; ‘தமிழுக்கு உழைப்பேன்’, ‘தமிழுக்காக உயிர் விடுவேன்’ என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக்கூடாது.-தந்தை பெரியார் விடுதலை (16.3.67)//

மேலும் பாவாணர் வெவ்வேறு புத்தகங்களில் சொன்னது.

நால்வேதம் அல்லது நால்மறை, ஆரங்கம் ஆகமம் என்பன எல்லாம் ஆரிய நூல்களே என்பதும், திருக்குறள் தவிர இப்போதுள்ள பண்டை நூல்களெல்லாம் அந்தணர் என்பதும் பிரமணரையே குறிக்கும் என்பது சரியே.
பக்க- 102 தமிழர் மதம்.தேவநேயன்.

பாணினீயம்

சமற்கிருதத்தின் தலைசிறந்த இலக்கண நூலாகிய பாணினீயம் பாணினியால் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட்து. இலக்கண நூலை வியாகரணம் என்பர் வடநூலார். அது கூறுபடுப்பு (Analysis) என்னும் பொருளது. நன்நான்கு இயல்கள் (பாதங்கள்) உள்ள எண்ணதிகாரங்கள் (அத்தியாயங்கள்) பாணினி வியாகர்ணம். அதனால் அது அட்டாத்தியாயீ (அஷ்டாத்தயாயீ) எனப் பெயர் பெற்றது. அதன் நூற்பாக்கள் (சூத்திர்ங்கள்) ஏற்த்தாழ 3980. அந்நூற்குமுன் எண்ணிலக்கண நூல்கள் இயற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அவற்றுள் வேதகாலத்த தெனப்படும் ஐந்திரம்.
தமிழர் வரலாறு- பக்க- 56,57

ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனப் பனம்பாரனாரும், "இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே" (தொல்880)
நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க்கு உரிய. (தொல்1570) என்று தொல்காப்பியரும் கூறியிருப்பதால், தொல்காப்பியர் காலத்திலேயே ஆரியம் தமிழகத்தில் ஓரளவும் வேர் ஊன்றிவிட்டதை அறியலாம்.
பக்கம்-40 தமிழ் வரலாறு.
நான்மறை, ஐந்திறம் நிறைந்த எனப் பாயிரத்தில் பனம்பாரணர் கூறுதலும், காப்பியர் வடமொழி அந்தணர் பற்றி விவரம் குறித்துள்ளதும், மேலும் அதங்கோட்டு ஆசான் முன் அரங்கேற்றம் எல்லாமும் கொண்டு காண்கையில் தொல்காப்பியர் ஆரியர் என உணரலாம்.

ஒப்பியன் மொழி நூல்


இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

இன்று நாம் காணும் முருகனுக்கு உரிய அனைத்தும் சங்க இலக்கியத்தில் உள்ளதே- எது இல்லை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை போன்றவற்றில் அதிகமாகவும் மற்ற நூல்களில் ஆங்காங்கே உள்ளதை தொகுத்துப் பார்க்கலாம்.

ஆனால் வரலாற்றில் ஆதாரமே இல்லாத இயேசுவோடு எதற்கு இணைத்து -அதுவும் முதலில் புனையப்பட்ட மாற்கு சுவிசேஷம்படி கைதான நிலையில் மிகவும் நம்பிக்கை இழந்து பேச்சின்றி, துயரத்துடன் இருக்க இறுதியில்" என் தேவனே! என்னை ஏன் கை விட்டீர்! என மரண ஓலத்துடன் இறந்த மனிதனோடு ஏன் பொருத்த வேண்டும்.
பாபா சாகேப் அம்பேத்கர் விவேகானந்தரின் முடிவை இன்னும் அதிகாரபூர்வமான ஆதாரத்தன்மையுடன் முன்வைக்கிறார்:
”ஆரிய படையெடுப்பு என்பது புனையப்பட்ட ஒரு கதை. இந்த புனைவு சிலரை மனமகிழ்விக்க உருவாக்கப்பட்ட நம்பிக்கைகளாலும் பிறகு அந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்களாலும் கட்டப்பட்டது.
அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் செய்யப் பட்ட வக்கிரத்தின் விளைவே இந்தக் கோட்பாடு. ஆரிய இனக் கோட்பாடு உண்மைகளின் அடிப்படையில் பரிணமித்ததல்ல. மாறாக முதலில் ஒரு கோட்பாட்டினை எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் அதனை நிரூபிக்க பொறுக்கியெடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒவ்வொரு புள்ளியிலும் தகர்ந்து விழும் கோட்பாடு இது.”
வேத இலக்கியங்களில் சொல்லப்படும் ஆரியர்கள் மற்றும் தஸ்யுக்கள் குறித்து அம்பேத்கர் கூறுகிறார்:
”இது குறித்து என் முடிவுகள் பின்வருமாறு:
1. வேதங்கள் ஆரியர் என்போரை ஒரு இனமாக அறியவில்லை.
2. ஆரிய இனம் என்ற ஒன்று படையெடுத்ததற்கோ அது இங்கிருந்த தஸ்யுக்கள் எனும் பூர்விக குடிகளை அடிமைப்படுத்தியதற்கோ எவ்வித சான்றுகளும் வேதத்தில் இல்லை.
3. ஆரிய/தஸ்யு வித்தியாசங்கள் இனரீதியிலானவை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
4.வேதங்கள் ஆரியரும் தஸ்யுகளும் வெவ்வேறு தோல் நிறம் கொண்டவர்கள் என கருத இடம் தரவில்லை. பிராமணர்கள் ஆரியரெனில் தலித்துகளும் ஆரியரே. பிராமணர்கள் திராவிடர்களெனில் தலித்துகளும் அவ்வாறே. ‘
இன்றைக்கு தொல்லியலும். மரபணுவியலும் சத்தியமென சொல்லும் வார்த்தைகளை அம்பேத்கர் வேதங்களை தன் பார்வையில் ஆராய்ச்சி செய்து சொல்லிவிட்டார்.

நண்பருக்கு வணக்கங்கள்...

ஆரியர்கள் யார் என்றத் தலைப்பில் ஏற்கனவே நான் பதிவிட்டு இருக்கின்றேன். அதனையும் தாங்கள் படித்து தங்களின் கருத்துக்களைத் தந்தீர்கள் என்றால் நலமாக இருக்கும்.

http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/06/blog-post_17.html

http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/06/2.html

மேலும் இன்று பிராமனர்களுள் பூணுல் அணியும் பழக்கம் இருக்கின்றது. அதே மாதிரியான பழக்கம் இரானியர்களிடம் இருப்பதும் ஆச்சர்யத்தினை தருகின்றது. மேலும் வட இந்தியாவினை கி.பி ஆறாம் நூற்றாண்டில் சதியால் பிடித்த அந்நியக் கூட்டம் தாங்கள் அக்னிக் குண்டத்தில் இருந்து மறு பிறப்பு எடுத்ததாகவும், அவர்கள் இரு பிறப்பாளர்கள் என்றுக் கூறிக் கொண்டு ஆர்யவர்தத்தினை வட இந்தியாவில் துவக்கிய செய்திகளும் சிந்தித்துப் பார்க்கத் தக்கனவாக இருக்கின்றனவே...!!!

இவற்றிற்கு தங்களின் கருத்துக்கள் என்னவோ?

//இன்று நாம் காணும் முருகனுக்கு உரிய அனைத்தும் சங்க இலக்கியத்தில் உள்ளதே- எது இல்லை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை போன்றவற்றில் அதிகமாகவும் மற்ற நூல்களில் ஆங்காங்கே உள்ளதை தொகுத்துப் பார்க்கலாம்.//

பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படையின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு பின்னரே என்பதும் இங்கே சிந்தித்துப் பார்க்கத் தக்கது.

//உலகப் பல்கலைக் கழகங்கள் ஹார்வர்ட், ஆக்ஸ்போர்ட் போன்றவை ஏற்பது பாரதம் முழுவதும் பேசிய மொழி வடமொழி, இதை நாம் அச்ப்ப்கர் கல்வெட்டுகளினாலும் அறியலாம். மைசூர் தமிழ் கல்வெட்டு தவிர மீதம் அனைத்தும் வடமொழி தான்.//

http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/06/32.html

மேலும் இப்பொழுது கிடைத்த சான்றுகள் மூலம் இந்தியாவில் கிடைத்துள்ள பழைமையான எழுத்து வடிவம் தமிழின் வடிவமே என்றும், அதனைக் கடன் வாங்கித் தான் அசோகர் அவரது கல்வெட்டுகளில் பயன்படுத்தினார் என்றுமே ஆய்வாளர்கள் கருதுகின்றனவே. மேலும் பிராகிருதம் என்பது ஒரு மொழி அல்ல... பிராகிருதம் என்றால் இயற்கையிலேயே உருவான மொழிகள் என்றே பொருள் தரும் என்று நான் அறிகின்றேன். தவறென்றால் திருத்தவும்.

http://archaeologyindia.com/adichanallur.asp


சங்க இலக்கியத்தில் நாம் , முழுவதுமாக ஆராய்ந்து நோக்க வேண்டும். இங்கு தமிழர் மரபு 2500 ஆண்டு மாறாமல் வருகிறது.அன்னியர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியால் எழும்பிய ஆரியர் - திராவிடர் கோட்பாடு. சற்றும் நிருபிக்கபடாதது. முதலில் வேதங்களில் ஆதாரம் என்றனர், சொன்னவை அத்தனையும் தவறு என்றபின் வேர்சொல், மொழியியல் வேறுபாடு, சிந்து சமவெளியின் அகழ்வாய்வினைத் தவறாக வகைப்படுத்தி எனச் செய்தவை அத்தனையும் தோற்றன.

அசோகர் கல்வெட்டு மொழி பற்றி விக்கியில் சொல்வது
The inscriptions found in the eastern part of India were written in the Magadhi language, using the Brahmi script. In the western part of India, the language used is closer to Sanskrit, using the Kharoshthi script,

ப்ராகிருதம் என்பது செய்ய்ளியல் செம்மை செய்யப்பட்ட சமஸ்க்ருதத்தின் பேச்சு வழக்கே ஆகும். தமிழ் கல்வெட்டுகள் பேச்சு வழக்கையே கொண்டுள்ளது, செய்யுள் மொழி அல்ல. ப்ராகிருதம் என்பதை ப்ரதம் கிருதம் எனப் பிரித்தல் முதல் மொழி எனவும் ஆகும். கால்ட்வெல் சுட்டிக் காட்டுவார்- தமிழ் மெய் எழுத்தில் தமிழுக்கு மட்டுமான சிறப்பு ஒலி கொண்ட எழுத்துக்கள் அனைத்தும் கடிசியில் வரிசையாய் அமைக்கப் பட்டுள்ளதை.
வாழ்வியலைப் பெறுமளவில் கூறிய பிற நூல்களைவிட பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படை தொன்மங்களை நேரிடையாகச் சொன்னாலும், இந்நுல்லில் உள்ள அனைத்தும் பிற பாட்டுத்தொகை நூல்களை ஒட்டியே உள்ளதே. சங்க இலக்கியத்தின் காலம் குறித்தலில் பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படையின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு என சென்ற தலைமுறை அறிஞர்கள் சொன்னனர் தான், அவர்கள் சொன்ன காரணம்- மற்ற புத்தகங்களைவிட சமஸ்க்ருத சொற்கள் பயன்படுத்தல் அதிகம் என, அதே போல சிலப்பதிகாரமும் கூட, சிலம்பின் காலத்தை தமிழ் அறிஞர்கள் பொ.மு. என கூறும் முழுநூல் இவ்விணைப்பில்.
http://valavu.blogspot.in/2010/05/1-2009-presentation.html
பாரதப் பண்பாடு என்பது குமரி முதல் வளைகுடா வரை இருந்தது. காந்தாரம்- இன்று ஆப்கனில் கந்தஹார் ஆக உள்ளது ஒரு உதாரணம். எனவே ஈரானியர்- ஆரியர் உளறல் எல்லாம் நடுநிலையாளர் ஏற்பதில்லை.


நீங்கள் கொடுத்த தொடுப்பின் முடிவில் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் கூற்று என உள்ளது-
Iravatham Mahadevan, an authority on the Tamil-Brahmi script, says in his seminal work "Early Tamil Epigraphy, From the Earliest Times to the Sixth Century A.D.", that "The Brahmi script reached Upper South India (Andhra-Karnataka regions) and the Tamil country at about the same time during the 3rd century B.C. in the wake of southern spread of Jainism and Buddhism."

//சங்க இலக்கியத்தில் நாம் , முழுவதுமாக ஆராய்ந்து நோக்க வேண்டும். இங்கு தமிழர் மரபு 2500 ஆண்டு மாறாமல் வருகிறது.அன்னியர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியால் எழும்பிய ஆரியர் - திராவிடர் கோட்பாடு. சற்றும் நிருபிக்கபடாதது. முதலில் வேதங்களில் ஆதாரம் என்றனர், சொன்னவை அத்தனையும் தவறு என்றபின் வேர்சொல், மொழியியல் வேறுபாடு, சிந்து சமவெளியின் அகழ்வாய்வினைத் தவறாக வகைப்படுத்தி எனச் செய்தவை அத்தனையும் தோற்றன.//

நண்பரே ஒரு விடயம்...ஆங்கிலேயர்கள் இங்கே வருவதற்கு முன்னர் வடக்கில் இருந்தே நாகரீகம் தெற்கே பரவியது என்றக் கூற்றே பரவலாக பரப்பப்பட்டு இருந்தது. ஆனால் காலங்களில் பல ஆராய்ச்சிகள் தோன்றத் தோன்ற சிந்து சமவெளியில் இருந்தவர்கள் தமிழர்களே என்றும் வடக்கில் இருந்து தெற்கே நாகரீகம் பரவவில்லை, மாறாக தெற்கில் இருந்தே வடக்கே பரவி இருக்கின்றது என்றும் ஆராய்ச்சிகள் புலப்படுத்த ஆரம்பித்தன. அது போலவே சமயங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும் காலங்கள் போக போக உண்மைகளை வெளிக் கொண்டு வரும்.

http://vazhipokkanpayanangal.blogspot.in/2011/11/11.html

இப்பொழுது சில கேள்விகள்,

௧) வருணாசிரமம் என்ற ஒன்று கி.மு வில் இருந்தமைக்கு சான்றுகள் இருக்கின்றனவா?

http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/06/blog-post.html

௨) சமசுகிருதம் மற்றும் வேதங்கள் கி.மு வில் இருந்தமைக்கு சான்றுகள் இருக்கின்றனவா? கி.மு வில் இன்றைக்கு இருக்கும் கடவுளரின் பெயர்கள் காணப்படவில்லையே அது ஏன் என்றும் கூற இயலுமா?

௩)இருக்கு வேதத்தில் இறுதியில் மக்களுக்காக உலகில் பிறந்த இறைவன் பலியாவதாக வருகின்றதே அது ஏன்? மேலும் இந்தியாவின் மேல் படையெடுத்த கிரேக்கர்கள் மற்றும் ஈரானியர்களின் பழக்க வழக்கங்கள் வேதங்களில் காணப்படுவது எதனால்?

http://www.indiadivine.org/audarya/spiritual-discussions/32990-christ-vedas.html

௪) சமசுகிருதத்தில் மகாயான பௌத்த நூல்கள் இருப்பது எதனால்?

௫) இந்தியாவினை சதியினால் பிடித்த அன்னியர்கள் அவர்கள் இரு பிறப்பாளர்கள் என்று கூறிக் கொண்டு பூணூல் அணித்துக் கொண்டதாக வரலாறு இருக்கின்றதே...அந்நிலையில் இன்று உயர் சாதியினர் அவ்வணமே காணப்படுவது எதனால்?

http://in.answers.yahoo.com/question/index?qid=20080224055629AAX90zg

http://www.holidaystravelguide.com/rajasthan-travel-guide/mount-abu-travel-guide/80-history.pdf


//அசோகர் கல்வெட்டு மொழி பற்றி விக்கியில் சொல்வது
The inscriptions found in the eastern part of India were written in the Magadhi language, using the Brahmi script. In the western part of India, the language used is closer to Sanskrit, using the Kharoshthi script,//

அதாவது சமசுகிருதத்தினை ஒத்த மொழி வடிவம் என்றே குறிப்பிடுகின்றார். ஆய்வாளர்களின் கருத்துப் படி பல மொழிகள் சேர்ந்து செய்யப்பட்டது தான் சமசுகிருதம் என்கின்ற பொழுது இதில் ஆச்சர்யம் இல்லையே.

மற்றப்படி தங்களின் சிலப்பதிகாரம் குறித்த இணைப்பினையும் மற்ற கேள்விகளுக்கு உரிய விடையினையும் கண்ட பின் கூறுகின்றேன் நண்பரே.மேலும் ஆரியர்களைப் பற்றிய எனது பதிவுகளைத் தாங்கள் படித்து தங்களின் கருத்துக்களைக் கூறினாலும் மிக்க நலமாக இருக்கும். மேலும் இந்தியாவில் தமிழ் எழுத்துகளுக்கு முந்தைய எழுத்துக்கள் யாதேனும் எங்கேனும் கிடைக்கப்பட்டு இருக்கின்றனவா என்றும் தாங்கள் உரைத்தால் எனது ஆராய்ச்சிக்கு அக்கருத்துக்களும் துணைப் போகும்.

பதிவிற்கு நன்றி.

ஆங்கரை கிருட்டிணன் அவரளே, முருகர் காசு, கி.மு 200 சார்ந்தது, வேலும் மயிலும் உடையது, அதாவது சிவமைந்தன் கந்தன், சூர சம்ஹாரமூர்த்தி வழிபாட்டின் தொன்மையை அழகாகத் தந்தீர்.
பாவாவாணர் மேற்கோள்கள் அற்புதம்.இந்தியர்களை பிரித்து கெடுக்க எழுப்பப்பட்ட புனையலே ஆரியர் கோட்பாடு வேதத்தில் இல்லை- அம்பேத்கார் சொன்னவை, அருமையான உண்மை அண்ணல் வாயிலேயே.

// வடக்கில் இருந்தே நாகரீகம் தெற்கே பரவியது என்றக் கூற்றே பரவலாக பரப்பப்பட்டு இருந்தது//- தவறான மூட நம்பிக்கைகளை ஏன் நீங்கள் பரப்புகிறீர்கள். ஆதி சங்கரர் முதல் அனைத்து வேத பாஷ்யங்களும் தெற்கிலிருந்து தானே. மெகஸ்தனிஸ் எழுத்து படிக்கும் போது, இன்றைய ஹிந்து மதமும் அதன் தொழில் ரீதியிலான பிரிவுகளும் தொடர்வதைத் தான் நிருபிக்கின்றது.
http://pagadhu.blogspot.in/2012/08/thomas-stories-are-spread-from-hearsay.html
இந்தியர்களை - தமிழர்களை ஏமாற்ற பாதிரிகள் தங்கள் பின் ஐயர் என கால்ட்வெல் ஐயர் - போப் ஐயர் என்று போட்டு ஏமாற்றினரே?ராபர்ட் - டிநொப்லி பாதிரி இரு பிறப்பாளர்கள் என்று கூறிக் கொண்டு பூணூல் அணித்துக் கொண்டு, ரோம வேதம் இது ஐந்தாவது வேதம் எனப் போலியாக எழுதி ரோமன் சர்ச்சில் மாட்டிக் கொண்டாரே.
தமிழகத்தில் முப்புரி நூல் அணிந்து இறை விசாரணை செய்து வரும் தொல்காப்பியர் முதல் - உ.வே.சா வரை, ஏன் சுஜாதா என நீழும் அந்தணர்களின் தமிழ்த் தொண்டைப் பாருங்களென். ஏன் போலிகளையே தெடுகிறீர்கள்.
அசோகர் கல்வெட்டு மொழி பற்றி விக்கியில் சொல்வது--/the language used is closer to Sanskrit, using the Kharoshthi script,// அது எழுதப்பட்டுள்ளது சமஸ்க்ருதத்தில் ஏன் தப்பாகவே அர்த்தம் செய்கிறீர்.
அறிஞர் ஐராவதம் மகாதேவன், போண்ரோர் நேரடி ஆய்வு முடிவுகளையே பார்க்க வேண்டும். மேலும் தொன்மையான கல்வேடுகள் கிடைத்தால் நன்றாக இருக்கும். சில இங்கே காண்கிறது.
http://newindian.activeboard.com/t36782212/semmozhi-tamil-ancient-archaeology-findings/?page=last#lastPostAnchor

@கருப்பையா அவர்கள்,

//மெகஸ்தனிஸ் எழுத்து படிக்கும் போது, இன்றைய ஹிந்து மதமும் அதன் தொழில் ரீதியிலான பிரிவுகளும் தொடர்வதைத் தான் நிருபிக்கின்றது.//

இந்து மதமும் தொழில் ரீதியான பிரிவுகளுமா?.... இந்து மதத்தில் இருப்பது தொழில் ரீதியான பிரிவுகளா அல்லது இறைவனால் வகுக்கப்பட்ட பிறப்பு வாரியான பிரிவுகளா? தொழில் ரீதியான பிரிவுகள் என்றால் தாழ்த்தப்பட்டோர் இனத்தில் இருந்து ஒருவரை சங்கர மடத்தின் தலைமையை ஏற்க விடுவரா? மேலும் மேகஸ்தநீசின் கூற்றுகளில் இன்று இருப்பது போன்று வருணாசிரமமோ, தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் தீண்டத்தகாதவர்கள் என்றப பிரிவுகளோ இல்லையே... மேலும் பிராமணர்கள் என்றும் உயர் சாதியினர் என்ற பிரிவுகளும் கூட காணப்படவில்லையே. சமுகத்தில் மதிப்பில் சிறந்தவர்கள் தத்துவ ஞானிகளும் விவசாயிகளுமாக அல்லவா திகழ்கின்றனர். மதக் குருக்கள் பற்றியக் குறிப்புகள் காணப்படவில்லையே. பின்னர் எவ்வாறு அக்காலத்தில் இருப்பதைப் போன்றே இன்றும் பிரிவுகள் இருக்கின்றன என்றுக் கூறுகின்றீர்.

//இந்தியர்களை - தமிழர்களை ஏமாற்ற பாதிரிகள் தங்கள் பின் ஐயர் என கால்ட்வெல் ஐயர் - போப் ஐயர் என்று போட்டு ஏமாற்றினரே?
ராபர்ட் - டிநொப்லி பாதிரி இரு பிறப்பாளர்கள் என்று கூறிக் கொண்டு பூணூல் அணித்துக் கொண்டு, ரோம வேதம் இது ஐந்தாவது வேதம் எனப் போலியாக எழுதி ரோமன் சர்ச்சில் மாட்டிக் கொண்டாரே.//

இவற்றைப் பற்றி அறிந்துக் கொண்டு தங்களின் கேள்விக்கு விடை அளிக்கின்றேன்.

//அது எழுதப்பட்டுள்ளது சமஸ்க்ருதத்தில் ஏன் தப்பாகவே அர்த்தம் செய்கிறீர்.//

சமசுகிருதத்தில் எழுதப்பட்டு உள்ளதா?... நண்பரே அந்த கல்வெட்டு கரகோசத்தி எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டு உள்ளது. சமசுகிருத எழுத்து வடிவத்தில் அல்ல. சமசுகிருதம் பல மொழிகளின் கலவையில் உருவான மொழி என்பதினால் பல மொழிச் சொற்களும் அதனில் காணப்படும். அதனை வைத்துக் கொண்டு அந்த முந்தைய மொழிகள் எல்லாம் சமசுகிருதம் என்றுக் கூறப் படுவது எங்கனம் பொருந்தும்.

//முருகர் காசு, கி.மு 200 சார்ந்தது, வேலும் மயிலும் உடையது, அதாவது சிவமைந்தன் கந்தன், சூர சம்ஹாரமூர்த்தி வழிபாட்டின் தொன்மையை அழகாகத் தந்தீர்.//

நண்பரே...அந்தக் காசினைப் பற்றி மேலும் ஆராய்ந்து கொண்டு இருக்கின்றேன். ஆராய்ந்து எனது கூற்றினைத் தெரிவிக்கின்றேன்.
http://murugan.org/research/suresh.htm

ஆனால் நீங்கள் எதனை வைத்து 'சிவமைந்தன் கந்தன், சூர சம்ஹாரமூர்த்தி வழிபாட்டின் தொன்மையை' என்றெல்லாம் சென்றீர்கள் என்று நான் அறிந்துக் கொள்ளலாமா...கி.மு வினில் அத்தகைய கூற்றுகளுக்கு சான்றுகள் இருக்கின்றனவா? இருந்தால் தெரிவிக்கவும்.

நண்பரே.
சமுகப் பிரிவுகளை மதத்தோடு சேர்த்தல் அரசியல் சூழ்ச்சிக்குச் சமம்.

ரோமன் கத்தோலிக்கப் போப்பரசராக ஒரு ஆப்பிரிக்கரையோ- தமிழரோ, இங்கு பணி செய்யும் நிலையில் ஆக முடியுமா? பைபிளில் பிறப்பினால் தான் அரச உரிமை யூதா கோத்திரத்திற்கு, லேவிக்கு பாதிரி பதவி என உள்ளதே? யூத ஆலயத்தின் உள்ளே செல்ல மற்றவர்க்கு அனுமதி இல்லையே. இயேசு யுதர் அல்லாதவர்களை நாய் என்றும் பன்றி எனவும் இனவெறியோடு சொல்லியுள்ளாரே?


// the language used is closer to Sanskrit, using the Kharoshthi script//
கரோஷ்டி எழுத்தில் எழுதப்பட்டது, மொழி அமைப்பில் சமஸ்க்ருதத்தினை ஒட்டி உள்ளது. அசோகர் கல்வேட்டுகள் படித்து அதை வகைபடுத்தியவர்கள் அதை சமஸ்க்ருதத்தில் மாற்றி தான் பொருள் செய்தனர்.


வேலும் மயிலும் சூரபன்மரை அழித்தபின் முருகர் ஏற்றவை

http://en.wikipedia.org/wiki/File:KarttikeyaWithSpearAndCockYaudheyas.jpg
http://en.wikipedia.org/wiki/Murugan
http://tamilartsacademy.com/journals/volume7/articles/article8.xml
http://tamilartsacademy.com/murugan.pdf

அகனானுறு - 59:10 - 11- சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சின மிகு முருகன்.

பதிற்றுப்பத்து- 11:1 - 6 சூரனை வென்றதைப் குமட்டூர் கண்ணனார் பாடியுள்ளார்.

சிவமைந்தன் என்பதும் முந்தைய சங்க இலக்கியத்தில் உள்ளதே.

//சமுகப் பிரிவுகளை மதத்தோடு சேர்த்தல் அரசியல் சூழ்ச்சிக்குச் சமம்.//

மன்னிக்கவும். இதனை நான் சேர்க்கவில்லை. மாறாக இன்றைய இந்தியாவின் அரசியல் நிலையினை கண்டீர்கள் என்றால் அத்தகைய சூழ்ச்சியினை யார் செய்து இருக்கின்றார் என்பதனை நாம் அறிந்துக் கொள்ளலாம். இன்றைய சமூகப் பிரிவுகள் இறைவன் அமைத்தவையே என்று தான் இந்துத்துவவாதிகள் கூறுகின்றனர் என்றே நான் அறிகின்றேன். எனவே இன்றைய சமூகப் பிரிவுகளுக்கும் சமயத்திற்கும் தொடர்பு இல்லை என்பது ஒன்று உங்களின் அறியாமையைக் குறிக்கும் அல்லது அந்த சூழ்ச்சியினை மறைக்கும் உங்களின் எண்ணத்தைக் குறிக்கும் என்றே நான் எண்ணுகின்றேன். ஏனெனில் பிராமணன் தலையில் இருந்து வந்தவர்கள் பிராமணர்கள்...காலில் இருந்து வந்தவர்கள் சூத்திரர்கள் என்றும், மனு தர்மத்தினை ஏந்திக் கொண்டு சூத்திரர்கள் எவரும் கல்வி கற்க கூடாது என்று அவர்களை சமுகத்தில் தாழ்த்தப்பட்டு வைத்து இருந்தது அரசியல் தான். இன்று அணைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தீர்ப்பை உச்ச நீதி மன்றல் நிலுவையில் வைத்து இருப்பதும் அந்த அரசியல் சூழ்ச்சி தான் என்பதனை தாங்கள் மறுக்க முடியுமா?

//ரோமன் கத்தோலிக்கப் போப்பரசராக ஒரு ஆப்பிரிக்கரையோ- தமிழரோ, இங்கு பணி செய்யும் நிலையில் ஆக முடியுமா? பைபிளில் பிறப்பினால் தான் அரச உரிமை யூதா கோத்திரத்திற்கு, லேவிக்கு பாதிரி பதவி என உள்ளதே? யூத ஆலயத்தின் உள்ளே செல்ல மற்றவர்க்கு அனுமதி இல்லையே. இயேசு யுதர் அல்லாதவர்களை நாய் என்றும் பன்றி எனவும் இனவெறியோடு சொல்லியுள்ளாரே?//

ரோமன் கத்தோலிக்க சபை கிருத்துவர்களின் உண்மையான சபை என்று யார் கூறியது...இந்து அமைப்புக்களைப் போல அதுவும் ஒரு அரசியல் அமைப்புத் தான். சமயங்களை தங்களது சூழ்ச்சியினால் தங்கள் வசம் ஆக்கிக் கொண்டு போலி அர்த்தங்களைப் பரப்பியும் உண்மைகளை மறைத்தும் மக்களை ஏமாற்றுவதில் ரோமன் கத்தோலிக்க சபையும் சரி இந்து சமயமும்(இந்துத்துவமும்) சரி ஒன்று தான். இரண்டுமே சரி அல்ல என்பதே எனது பதிவு என்பதனை தாங்கள் என்னுடைய அனைத்துப் பதிவுகளையும் படித்து இருந்தீர்கள் என்றால் அறிந்து இருப்பீர் என்றே எண்ணுகின்றேன்.

இரு அமைப்புகளுமே மக்களை ஏமாற்றி பலன் அடையும் அமைப்புகளே. இரு அமைப்புகளுமே உண்மைகளை மறைக்கும் அமைப்புகளே. காலத்தில் இவ்வமைப்புகள் மூலமாக பல நூல்கள் அழிக்கப்பட்டமையும் நாம் அறிவோம்.

//கரோஷ்டி எழுத்தில் எழுதப்பட்டது, மொழி அமைப்பில் சமஸ்க்ருதத்தினை ஒட்டி உள்ளது. அசோகர் கல்வேட்டுகள் படித்து அதை வகைபடுத்தியவர்கள் அதை சமஸ்க்ருதத்தில் மாற்றி தான் பொருள் செய்தனர்.//
நண்பரே சமசுகிருதம் கி.மு வில் இருந்தமைக்கு சான்றுகள் இருக்கின்றனவா?... சமசுகிருதம் என்ற சொல்லோ... சமசுகிருத எழுத்துக்களோ இருந்தமைக்கு சான்றுகள் இருக்கின்றனவா? நான் அசோகரின் கல்வெட்டுகளை ஆங்கிலத்தில் மாற்றி பொருள் சொன்னால் அசோகரின் கல்வெட்டுகள் ஆங்கிலத்தில் இருந்தது என்றுப் பொருள்படுமோ?

//வேலும் மயிலும் சூரபன்மரை அழித்தபின் முருகர் ஏற்றவை//
மயில் குறிஞ்சி நிலப் பறவை. சேயோன் குறிஞ்சி நிலத் தெய்வம். நிற்க. சூரபதுமனை முருகன் அழித்தான் என்ற செய்தி சங்க இலக்கியங்களில், அதாவது கி.மு காலத்து இலக்கியங்களில் எங்காவது காணப்படுகின்றனவா? கி.மு வில் பலி வழிப்பாட்டோடு முருகன் இணைக்கப்பட்டு இருக்கின்றானே...பின் எவ்வாறு இன்று தூய சைவனாக காட்சி அளிக்கின்றான். ஏன் இந்த மாற்றம்.
மேலும் சிவன் என்ற பெயர் சங்க இலக்கியங்களில் எங்குமே காணப்பட வில்லையே. அது ஏன்?

//தவறான மூட நம்பிக்கைகளை ஏன் நீங்கள் பரப்புகிறீர்கள். ஆதி சங்கரர் முதல் அனைத்து வேத பாஷ்யங்களும் தெற்கிலிருந்து தானே.//
தாங்கள் தெளிவாக இருக்கின்றீர் நண்பரே அணைத்து சமயங்களும் தெற்கில் இருந்தே சென்றவை என்று ஆனால் பலர் வடக்கில் இருந்து தான் தெற்கே வந்தது என்றும், வட மொழியில் இருந்து தான் தமிழ் வந்தது என்றும், தமிழ் ஒரு நீச மொழி என்றும் தமிழர்கள் நீச இனத்தவர் என்றும் கூறுகின்றார்களே. அவர்கள் பரப்பும் இந்த மூட நம்பிக்கைகளை என்ன செய்ய சொல்லுகின்றீர்!!!

//தமிழ் ஒரு நீச மொழி என்றும் தமிழர்கள் நீச இனத்தவர் என்றும் கூறுகின்றார்களே. அவர்கள் பரப்பும் இந்த மூட நம்பிக்கைகளை என்ன செய்ய சொல்லுகின்றீர்!!!// இதைப் கிறிஸ்துவப் பாதிரியார்களும் சுயநல திராவிட திருட்டு அரசியல்வாதிகளும் தான் சொல்கிறார்கள், அவர் - இவர் சொன்னர் என, தக்க ஆதாரங்கள் தரவும்.

இக்கட்டுரை பல விளக்குகிறது.
http://ankaraikrishnan.wordpress.com/2012/09/05/muruga/#comment-64

ஏசு என ஒருவர் வாழ்ந்தாரா? அவர் மத்தேயுவின் பெத்லஹெம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப் மேரியின் மூத்த மகனா, ஆபிரகாமிலிருந்து 41ஆவது தலைமுறையா? லூக்காவின்படி நாசரேத் வாழ் ஏலி மகன் ஆபிரகாமிலிருந்து 57ஆவது
தலைமுறையா?
யோவான்6: 8 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே. 58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். ‘
பலித்ததா?? யூதர்களுள் உலகம் அழியப் போகிறது என நம்பிய ஒரு குழுவினர் அதீதமாய் நம்பிய கட்டுக்கதை- மேசியா வருகை. மேசியா வந்தால் அவரோடு உலகம் அழியும் – யார் அந்த கிறிஸ்து-கடைசி நபி????
http://pagadhu.blogspot.in/2012/06/blog-post_24.html
யேசு- தேவ குமாரனா?- இல்லையே!

தமிழ் ஹிந்து சுட்டிக்கு சென்று அங்கே உங்கள் மேலான சிந்தனை வேறு பக்கம் திசை திரும்ப நான் விரும்ப வில்லை ... ஆதலாலே ஆண்ட கருத்துகளை இங்கு ஒட்டி உள்ளோம்

தங்களின் நல்ல எண்ணத்திற்கு நன்றி நண்பரே... ஆயினும் தமிழ் இந்து போன்ற இந்துதுவ வெறியினைக் கக்கும் இணையத்தளங்களின் போக்கினை அறிய ஆண்டவன் எனக்கு நல்ல சிந்தையைக் கொடுத்துள்ளதால் அவர்களின் கருத்துக்களால் யாதொரு மாற்றமும் வர போவதில்லை...!!!

Sir,

Please read about Subramaniyar Gnanakovai
Subramaniar(Murugar) Agathiyarku upathesitha(Advice) seytha nool.
Muruganuku innoru peyar-Kangeyan-Murugan pirantha idam-Kangeyam.
Pogar koorum paadalil irunthu Murugan satharanamaga nammai pol pirnatha sithaan enre koorukiraar.

Murugar/Siva(Vaasi-Moochu)/Vishnu(maayay vendravan)/paarvathi all gods are not Gods all are GURU,Lived as Human they helped us to acheive us to reach god's(Anbe sivam-Pittham irunagiya Sittha nilai)-Kadavul-Kada+ul.nilai adaya Arivurai kooriyavargal.
Their is no God called-Siva/Vishnu/Muruga/Parvathi etc.,
Kadavul enpathau analla/pennala/aliyumalla...

Murugan Sitthan.
Muthal Sithan Sivan
Murugan Seedan Agathiyan Sitthan
Agathiyar seedan Tholkaapiyan Sithan
Avvayar m sitthar

Thats why in Tamil.
We have Uyir eluthu,Mey eluthu.
Nammidam irunthu edukapattathu..


En thedalil jesus m sitthane..
As per Ramadevar sitthar(Yacob sitthar) Prophet Muhamed also a sitthan.
All these peoples guided us to reach ourself as kind person(Anbu Nirnathai manithar nilai)

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி