கி.பி 52...!!!

தூய தோமா இந்தியா வந்ததாக சொல்லப்படும் காலம்.

கிருத்துவின் கருத்துக்களைப் பரப்புவதற்காக கடல் கடந்து தமிழகத்தின் மேற்கு பகுதியை வந்தடைந்து, பின்னர் இந்திய தேசம் முழுவதும் தனது பணியை மேற்கொண்டு இறுதியில் தமிழகத்தில் மயிலையில் சிலரால் கி.பி 72 ஆம் ஆண்டில் கொல்லப்படுவதாக நீள்கிறது இவரது வரலாறு. இது தோமா இந்தியா வந்தார் என்றுக் கூறுபவர்கள் கூறும் கூற்று.

இதனை மறுப்பவர்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.

"ரோம மன்னன் ஆகசுடசு காலத்து நாணயங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றன சரி...இந்தியாவின் வட பகுதியில் கொண்டாபோரசு என்ற அரசன் ஆண்டான். அதுவும் சரி. ஆனால் இதை மட்டும் வைத்துக் கொண்டு தோமா இந்தியா வந்தார் என்றுக் கூறுவது எவ்வாறு சரியாகும். அசோகர் பௌத்தத்தை பரப்பினார் என்றால் அதற்கு சான்றாய் இந்தியா முழுவதும் பௌத்தக் கருத்துக்கள் காணப்படுகின்றன. அதைப் போலவே தோமாவும் கிருத்துவின் கருத்துக்களைப் பரப்ப வந்தார் என்றால் கிருத்துவின் கருத்துக்கள் இங்கே காணப்பட வேண்டுமே. அவ்வாறுக் காணப்பட்டால் தானே அவர் வந்தார்...சேவை செய்தார் என்றுக் கூற முடியும். அவ்வாறு சான்றுகள் இல்லாமல் எவ்வாறு தோமா இந்தியா வந்தார் என்று ஏற்றுக் கொள்ள முடியும்?" என்பதே அவர்களின் கூற்றாக இருக்கின்றது.

நியாயமான கேள்விதான். தோமா இந்தியா வந்து இருந்தால் கிருத்துவின் கருத்துக்களும் அவருடனே வந்து இருக்க வேண்டுமே. இந்தியாவினில் பரவி இருக்க வேண்டுமே. அவ்வாறு இருந்தால் தானே தோமா இந்தியா வந்தார் என்றுக் கூற முடியும்.

எனவே இப்பொழுது நாம் இந்தியாவில் தோமா கொண்டு வந்த கிருத்துவின் கருத்துக்களுக்கு சான்றுகள் இருக்கின்றனவா இல்லையா என்பதை காண வேண்டி இருக்கின்றது.

முந்தைய பதிவுகளில் நாம் பார்த்தபடி சிலுவை கிருத்துவர்களின் சின்னம் அல்ல. மாறாக திருநீறே அவர்களின் சின்னம் என்று நாம் கண்டு இருந்தோம்.

இந்நிலையில் சில கேள்விகள் இயல்பாகவே எழலாம்...!

இந்துக்களும் திருநீற்றினை இடுகின்றார்கள்...அதே முறை தான் கிருத்துவத்திலும் இருக்கின்றது. ஏன் இந்த ஒற்றுமை? ஒரு வேளை இரண்டு மதங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ? இல்லையெனில் எதேச்சையாக வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் உருவான இரு மதங்களில் ஒரே மாதிரியான பழக்கம் தற்செயலாக உருவாகி இருக்குமோ?

இக்கேள்விகளுக்கு விடையினைக் காண நாம் நமது இலக்கியங்களைக் காண வேண்டி இருக்கின்றது.

கிருத்துக்கு முற்பட்ட காலத்து தமிழ் இலக்கியங்களிலும் சரி, சைவ வைணவ மதங்களின் அடிப்படை என்று பெரும்பாலானோரால் நம்பப்படும் வேதங்களிலும் சரி திருநீற்றினைப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. கிருத்துக்கு பிற்பட்ட தமிழ் இலக்கியங்களில் திருநீற்றினைப் பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன ஆனால் கிருத்துக்கு முற்பட்ட காலத்தில் இது வரை திருநீரைக் குறிக்கும் செய்திகள் காணப்படவில்லை.

அதைப்போலவே சிவலிங்கத்துடன் நந்தி இணைந்து இருப்பது போல் உள்ள வழிப்பாட்டு முறையும் கிருத்துக்கு முந்தைய கால இலக்கியங்களிலும் சரி வேதங்களிலும் சரி காணப்படவில்லை. ஆனால் அத்தகைய வழிபாட்டு முறை விவிலியத்தில் குறிக்கப்பட்டு இருப்பதை நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்.

சிவலிங்கம்/கல் வழிபாட்டு முறை கிருத்துக்கு முந்தைய கால இலக்கியங்களில் பல கிடைத்தாலும் நந்தி/கன்றுக்குட்டி உடன் இருப்பது போன்ற வழிபாட்டு முறை கிருத்துக்கு பிந்தைய கால இலக்கியங்களிலேயே காணப்படுகின்றது.

இங்கே தான் நாம் யோசிக்க வேண்டி இருக்கின்றது. விவிலியத்தில் கூறப்பட்டு உள்ள வழிபாட்டு முறைகள் இன்று சைவ வைணவ சமயங்களில் பழக்கத்தில் உள்ளன. ஆனால் சைவ வைணவ மதங்களின் அடிப்படை என்று கூறப்படும் வேதங்களிலோ அந்த வழிப்பாட்டு முறைகளைப் பற்றிய குறிப்புகளே இல்லை, மேலும் கிருத்துவுக்கு முற்பட்ட கால இலக்கியங்களில் அந்த பழக்க வழக்கங்கள் இந்தியாவினால் நடைமுறையில் இருந்ததற்கான சான்றுகள் இது வரை கிட்டவில்லை.

அப்படி இருக்கையில் விவிலியத்தில் காணப்படும் அந்த பழக்க வழக்கங்கள் எவ்வாறு இந்திய சமயங்களில் காணப்படுகின்றன என்று அறிஞர்கள் ஆராயும் பொழுது தான் அந்த இணைப்பு அவர்களின் கண்ணுக்கு புலப்படுகின்றது.

அந்த இணைப்பு தான் - தோமா!!!

ஆம். தோமா இந்தியாவுக்கு வந்தார் என்று கூறப்படும் காலத்திற்கு பின்னரே மேலே நாம் கண்ட வழிபாட்டு முறைகள் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களிலே நமக்கு கிடைக்க பெறுகின்றன. அவை சைவ இலக்கியங்களாக இருக்கட்டும் வைணவ இலக்கியங்களாக இருக்கட்டும் அனைத்தும் தோமாவின் காலத்திற்கு பின்னரே உருவானவைகளாகவே இருக்கின்றன.

எனவே தோமா கொண்டு வந்த கருத்துக்களின் படி தான் மேலே நாம் கண்ட வழிபாட்டு பழக்க வழக்கங்கள் இந்தியாவினுள் தோற்றம் பெற்றன என்று நாம் கருத முடிகின்றது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

அதாவது அவர்களின் கூற்றுப்படி தமிழர்களின் சிவலிங்க/கல் வழிபாடு தெற்கில் இருந்து சிந்து சமவெளியை அடைந்து பின்னர் மேற்கே சென்று யூதர்களின் பழக்கமாகவும் மாறுகின்றது. பின்னர் அதேப் பழக்கம் கிருத்துவுக்கு பின்னால் தனது மாறுபட்ட நிலையில் தோமாவின் வாயிலாக இந்தியா வந்தடைகின்றது...!

அவ்வாறு வந்த கருத்துக்களும் பழக்க வழக்கங்களும் தான் சைவ வைணவ சமயங்களாக வளர்ந்தன என்றும் அவர்கள் கருதுகின்றனர். நிற்க.

வில்லங்கமான கூற்று தான்....இல்லையா!!! ஆனால் இந்தக் கூற்றினை முற்றிலுமாக மறுக்கவும் முடியவில்லை ஏனெனில் அனைத்து சைவ வைணவ இலக்கியங்களும் சரி அனைத்து ஆழ்வார்களும் நாயன்மார்களும் சரி எல்லோரும் தோமா இந்தியாவுக்கு வந்த காலத்திற்கு பின்னரே தான் தோன்றி இருக்கின்றனர். அதுவும் குறிப்பாக முதல் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் என வழங்கப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், காரைக்கால் அம்மையார் ஆகியோர் அனைவருமே தோமா மறைந்ததாக கூறப்படும் மயிலையை சுற்றி உள்ள இடத்தில இருந்தே தோன்றி உள்ளனர். மேலும் திருவள்ளுவரும் அதே காலத்தில் திருமயிலையில் தோன்றி இருப்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

இந்த தகவல்கள் அனைத்தும் வெறும் ஒற்றுமைகளாக இருக்கலாம் அல்லது ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையதாக இருக்கலாம். அதனை அறிந்துக் கொள்ள நாம் கிருத்துவ மதத்தின் கொள்கையையும் காண வேண்டும்...சைவ வைணவ மதங்களின் கொள்கைகளையும் காண வேண்டும்.

காண்போம்...!!!

முந்தைய பதிவுகள் : 1 | 2 | 3  | 4 | 5  | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13| 14  | 15 |16 |17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |  

40 கருத்துகள்:

SUPER BUT NEED FAST
I DONOT WAIT

நீங்கள் கூறுவதுபடி தோம என்பவர் இந்திய வந்தார் என்றால் அவர் கிறிஸ்துவத்தின் கருத்துக்களை கொண்டு வரவேண்டுமே தவிர யூத சமயத்தின் கருத்துக்களை அல்ல (திருநீறு பூசுவது, சிவலிங்க வழிபாடு)

@venkat Raja,

லிங்க (கல்) வழிபாடு யூதர்களுடையது என்று யார் கூறியது? அது தமிழர்களுடையது (உலகின் முதல் மனிதன் தமிழன் என்றால் யூதனும் தமிழன் தானே). நம்முடைய பதிவுகள் அனைத்தையும் தாங்கள் உன்னிப்பாக கவனித்து வந்தீர்கள் என்றால் குமரிக் கண்டத்தில் தோன்றிய மனிதன் கொண்டு இருந்த கல் வழிபாடு பின்னர் அவனோடு தேசங்கள் கடந்து சென்றது... சென்ற இடத்தில் மனிதனுக்கு புதுத் தத்துவம் இறைவனால் கிடைக்கின்றது (இறைவன் பலியாகின்றார்...இறைவன் மகன்... இறைக் குடும்பம்)... அத்தத்துவம் மீண்டும் மனிதர்களால் உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றது. இதுவே சமயங்களின் சுருக்கமான வரலாறாகும். இதனைத் தான் நாம் விரிவாக பல்வேறு பதிவுகளாகக் கண்டுக் கொண்டு இருக்கின்றோம்.

லிங்கம்/கல் மனிதனுக்கு பொதுவாக இருந்த கடவுளின் அடையாளமாக அறியப்பட்டது. அதனால் தான் இயேசுவினை 'வாழும் கல்' என்று விவிலியத்தில் குறிக்கப்பட்டு உள்ளது.

குமரி கண்டத்தில் முதல் மனிதன் தோன்றினான் என்றால் விவிலியம்படி ஏதேன் தோட்டத்தை கடவுள் அங்கு தான் படைத்தாரா?

விவிலியம்படி சிலை வழிபாடு என்பது ஒரு கொடுமையான செயல் மற்றும் அது தடை செய்யப்பட்ட ஒன்று...(பழைய ஏற்பாட்டிலும் சரி புதிய ஏற்பாட்டிலும் சரி)

சரி தோமா என்பவர் வந்திருந்தால் திருநீறு பூசுங்கள் மற்றும் கல்லை மட்டும் வணங்காமல் கூடவே நந்தி /கன்றுக்குட்டியை சேர்த்து வணங்குங்கள் என விவிலியத்திற்கு முரண்பாடான கருத்துக்களை கொண்டு வந்து வழிபாட்டு முறையை மாற்றி இருப்பாரா?

இயேசு என்பவர் எங்கேயாவது சிவலிங்கத்துடன் நந்தி இணைந்து இருப்பது போல் உள்ள வழிப்பாட்டு முறையை நடைமுறைபடுத்துங்கள் என்று சொன்னாரா?

திருநீறு பூசுவது இயேசு என்பவர் எங்கேயாவது நடைமுறைபடுத்துங்கள் என்று சொன்னாரா? என்றால் இல்லை என்றே பதில் இருக்கும், விவிலியம்படி சாம்பல் பூசுவது என்பது வரலாறு தவிர நடைமுறைபடுத்த அல்ல...

//குமரி கண்டத்தில் முதல் மனிதன் தோன்றினான் என்றால் விவிலியம்படி ஏதேன் தோட்டத்தை கடவுள் அங்கு தான் படைத்தாரா?//

ஆம்...!!!

//சரி தோமா என்பவர் வந்திருந்தால் திருநீறு பூசுங்கள் மற்றும் கல்லை மட்டும் வணங்காமல் கூடவே நந்தி /கன்றுக்குட்டியை சேர்த்து வணங்குங்கள் என விவிலியத்திற்கு முரண்பாடான கருத்துக்களை கொண்டு வந்து வழிபாட்டு முறையை மாற்றி இருப்பாரா?

இயேசு என்பவர் எங்கேயாவது சிவலிங்கத்துடன் நந்தி இணைந்து இருப்பது போல் உள்ள வழிப்பாட்டு முறையை நடைமுறைபடுத்துங்கள் என்று சொன்னாரா?//

தத்துவங்கள், கொள்கைகள் என்பன வேறு...!!! பழக்க வழக்கங்கள் என்பன வேறு.

சமயமும் சமயக் கருத்துக்களும் தத்துவங்களின் அடிப்படையிலும் கொள்கைகளின் அடிப்படைகளிலும் தோன்றுபவை...!!!

வழிப்பாட்டு முறைகள் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் தோன்றுபவை. எனவே வெறும் வழிப்பாட்டு முறையினை வைத்துக் கொண்டு சமயக் கருத்துக்களையோ அல்லது சமயதினையோ அறிய முயற்சிப்பது பலன் தாராத ஒரு செயலே ஆகும்.

எனது கருத்து தோமா இயேசுவின் கருத்துக்களைக் கொண்டு வந்தார்...பின்னர் அக்கருத்துக்களும் பல்வேறு பழக்க வழக்கங்கள் கொண்ட மக்களும் சமுகத்தில் கலக்கும் பொழுது பழக்க வழக்கங்கள் மாறி இருக்கின்றன. அதற்கு வரலாற்றினைத் தாங்கள் படிக்கத் தான் வேண்டும்!!!

சிவன் எங்காவது வந்து திருநீறு பூசுங்கள், குங்குமம் பூசுங்கள், விளக்கினை ஏற்றுங்கள் என்றுக் கூறினாரா என்ன?பின்னர் எவ்வாறு நந்தி சிவலிங்கத்துடன் இணைக்கப் பெற்றார்?

மேலும் சித்தர்களும் சிலை வழிப்பாட்டினை எதிர்த்து தான் இருக்கின்றார்கள்.

//
//குமரி கண்டத்தில் முதல் மனிதன் தோன்றினான் என்றால் விவிலியம்படி ஏதேன் தோட்டத்தை கடவுள் அங்கு தான் படைத்தாரா?//

ஆம்...!!!//

ஆம் என்றால் ஆதாரம்?

//பின்னர் எவ்வாறு நந்தி சிவலிங்கத்துடன் இணைக்கப் பெற்றார்?//

அது தானே ஐயா நானும் கேட்கிறேன், திருநீறு பூசுங்கள் மற்றும் கல்லை மட்டும் வணங்காமல் கூடவே நந்தி /கன்றுக்குட்டியை சேர்த்து வணங்குங்கள் என தோமா தான் இந்தியாவிற்கு கொண்டு வந்தாரா?

//ஆம் என்றால் ஆதாரம்?//

அந்தச் சான்றுகளைக் குறித்து நான் ஏற்கனவே பல பதிவுகள் எழுதிவிட்டேன் நண்பரே... சான்றாக,

http://vazhipokkanpayanangal.blogspot.in/2011/11/11.html

http://vazhipokkanpayanangal.blogspot.in/2011/11/8.html

http://vazhipokkanpayanangal.blogspot.in/2011/11/7.html

http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/02/18.html

சரி... நீங்கள் உலகின் படைப்பைப் பற்றி என்ன கூறுகின்றீர். இறைவன் படைத்தான் என்கின்றீர்களா அல்லது இறைவனே இல்லை பரிணாம வளர்ச்சி என்கின்றீர்களா? உங்களின் கருத்துக்களைச் சற்று கூறினால் நலமாக இருக்கும்.

இரண்டு பக்கமும் நியாயம் இருக்கு ஐயா, ஆனால் உண்மை எது என்று குழப்பமாகவே உள்ளது...

இரண்டு பக்கமும் நியாயம் இருக்கு ஐயா, ஆனால் உண்மை எது என்று குழப்பமாகவே உள்ளது...

இதை பற்றி பிறகு நான் சொல்லுகிறேன்...

////குமரி கண்டத்தில் முதல் மனிதன் தோன்றினான் என்றால் விவிலியம்படி ஏதேன் தோட்டத்தை கடவுள் அங்கு தான் படைத்தாரா?//

ஆம்...!!!//

ஐயா வணக்கம், குமரி கண்டத்தில் ஏதேன் என்னும் தோட்டத்தை கடவுள் படைத்தார் என்றால் குமரி ஆறு மற்றும் பஃறுளி ஆறு ஆகிய ஆறுகள் பெயர் பைபிளில் இருக்கணுமே மாறாக பைசோன், கீகோன், இதெக்கேல் மற்றும் ஐபிராத்து ஆகிய நதிகள் இருக்க காரணம். சரி பைசோன் நதி ஆவிலா தேசத்திலும், கீகோன் நதி எத்தியோப்பியா தேசத்திலும், இதெக்கேல் நதி அசீரியா தேசத்திலும் ஓடுகிறது என்று பைபிளில் உள்ளது. தற்போது ஆவிலா தேசம் பற்றி எனக்கு தெரியவில்லை மாறாக எத்தியோப்பியா தேசம் வடகிழக்கு ஆப்பிரிக்கப் பகுதியில் அமைந்துள்ள நாடு என்பது நன்றாகவே தெரியும். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் ஆதாம் என்ற மனிதன் எத்தியோப்பியா தேசத்திற்கு அருகில் தான் படைக்கப்பட்டான் என பைபிளில் உள்ளது தெளிவாகிறது, குமரி கண்டத்தில் இல்லை என்பது புலனாகிறது... நீங்கள் பைபிளில் உள்ளதை உண்மை என நிரூபிக்க தயவு செய்து குமரி கண்டத்தையும் தமிழனையும் இழுக்காதீர்கள்... நன்றி...

:) மீண்டும் மீண்டும் ஒரே வட்டத்தினுள் சுற்றிக் கொண்டு இருக்கின்றோம். சரி ஐயா தாங்கள் கூறுங்கள்...வரலாற்றில் நடந்தது என்ன? மெய்யான சமயம் எது? கடவுள் இருக்கின்றாரா இல்லையா? அவ்வாறு இருந்தால் அவர் எந்த சமயத்தினைச் சார்ந்தவர்? தெளிவாக கூறினீர்கள் என்றால் நானும் பலன் அடைந்துக் கொள்வேன்.

ஐயா வணக்கம், குமரி கண்டத்தில் தான் முதல் மனிதன் தோன்றினான் என்பது உண்மையா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் நீங்கள் இதுவரை கிறிஸ்துவ பைபிளை நிரூபிக்க அந்த பைபிள் கருத்துக்களை தமிழர்களுடன் இணைபடுத்தி பொய்யான கருத்துக்களை கூறி வந்தீர்கள் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள் நான் மெய்யான சமயம் எது? கடவுள் இருக்கின்றாரா இல்லையா? என்பதை கூறுகிறேன் சரியா...

பொய்யா...நானா...சிரிப்பு தான் நண்பரே வருகின்றது. சரி இப்பொழுது உங்களின் முந்தையக் கேள்வியினுக்கு விடையினைக் காண்போம். பழைய ஏற்பாடு என்பது தொகுக்கப்பட்ட காலம் கி.பி முதல் நூற்றாண்டு. ஆனால் அதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அதே வெள்ளக் கதை சுமேரிய இலக்கியங்களில் இருக்கின்றது. ஆனால் அந்தக் கதை சற்று மாறி இருக்கின்றது. முதல் மனிதன் ஆதப்பா எனப்படுகின்றான்...வெள்ளத்தில் பிழைத்த மனிதன் ஊத் நா பிஸ்டிம் எனப்படுகின்றான்...இதர..இதர...சரி அவை இருக்கட்டும். இப்பொழுது சில கேள்விகள்,
1) சுமேரிய இலக்கியம் விவிலியத்திற்கு வெகு காலத்திற்கு முந்தையது...அவ்வாறு இருக்க ஏன் பழைய ஏற்பாட்டில் பெயர்கள் மாறி இருக்கின்றன?
2) ஆதாமின் மகன்களான ஆபேலும் கேனும் விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு போன்ற பணிகளைச் செய்கின்றனர். விவசாயம் முதல் மனிதனிடம் இருந்தே தொடங்கி விட்டதா?
3) கெயின் அவனுடைய தம்பியைக் கொன்றவுடன் உலகில் உள்ள மற்ற மக்கள் அவனைக் கொல்வார்கள் என்று அஞ்சுகின்றான். உலகின் முதல் மனிதனின் புதல்வர்கள் அவர்கள். அவர்கள் இருவருமே ஆண்கள்...அவ்வாறு இருக்க அதற்குள் மற்ற மனிதர்கள் தோன்றியது எவ்வாறு?
4) விவிலியத்தில் அக்காலத்தில் ராட்சசர்கள் இருப்பதாக செய்தி இருக்கின்றது. அவர்களைப் படைத்தது யார்? அவர்கள் எங்கே இருந்தனர்?

இன்னும் பல கேள்வி கேட்டுக்கிட்டே போலாம்...அக்கேள்விகளுக்கு விவிலியத்தில் இருப்பது எல்லாம் உண்மை..அதனைக் கேள்விக் கேட்க கூடாது. அவை இறைவன் சொன்னது என்றுக் கண்மூடித் தனமாக நம்புபவர்களால் பதில் கூற இயலாது. காரணம் அவர்கள் சிந்திப்பதில்லை (இது அனைத்து சமயத்தினருக்கும் பொருந்தும்). யூத சமயத்தின் கொள்கைக்கு மாறான கிருத்துவின் கருத்துக்கள் தோன்றிய பின் எதற்காக பழைய ஏற்பாடு தொகுக்கப்பட்டு இருக்கின்றது என்பதனைப் பற்றியும் அவர்களுக்கு சிந்தனைகள் இல்லை. (பழைய ஏற்பாடு ஏன் தொகுக்கப்பட்டு இருக்கின்றது என்று நாம் முன்னரே பதிவுகளில் கண்டு இருக்கின்றோம்..படித்து இருப்பீர் என்றே நம்புகின்றேன்)

// எத்தியோப்பியா தேசம் வடகிழக்கு ஆப்பிரிக்கப் பகுதியில் அமைந்துள்ள நாடு என்பது நன்றாகவே தெரியும். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் ஆதாம் என்ற மனிதன் எத்தியோப்பியா தேசத்திற்கு அருகில் தான் படைக்கப்பட்டான் என பைபிளில் உள்ளது தெளிவாகிறது,//

உலகம் படைக்கப்பட்ட பொழுதே இன்று இருக்கும் அதே வடிவிலா இருந்தது? அப்பொழுதே எதியோபியா என்ற தேசம் இருந்ததா? எத்தியோபியா வெள்ளத்தில் அழிந்ததாக சான்றுகளோ அல்லது செய்திகளோ இருக்கின்றனவா? அப்படி இருக்க அது எவ்வாறு சரியானதொன்றாகும்?

மேலும் உலகம் தொடங்கியதில் இருந்து வாழ்ந்து வரும் மனிதன் எவனும் இல்லை...ஆரம்பக் காலத்தில் இருந்து இருந்து வரும் நூல்கள் என்பனவும் எவையும் இல்லை... எந்த நூலினையும் இறைவன் எழுதவில்லை...இந்நிலையில் எந்த ஒரு நூலினையும் அப்படியே நம்புவது என்பது அறியாமையைத் தான் காட்டும். அதுபோல் தான் சிந்திக்காது எந்த ஒரு நூலினையும் எதிர்ப்பதும் அறியாமையைத் தான் காட்டும்.

http://vazhipokkanpayanangal.blogspot.in/2010/11/1_29.html

மேலும், இதுவரை தாங்கள் மெய்யான சமயம் என்று எதனைக் கருதுகின்றீர்கள் என்று கூறவே இல்லையே...இந்தக் கூற்றுகள் பொய் என்றால் மெய் என்றுக் தாங்கள் கருதுவது எதனை? கூறினால் நன்றாக இருக்கும். இதுவரை கூறுகின்றேன் கூறுகின்றேன் என்றுக் கூறுகின்றீர்களே தவிர ஒரு விடயத்தையும் கூறவில்லையே நண்பரே!!!

//ங்கள் பைபிளில் உள்ளதை உண்மை என நிரூபிக்க தயவு செய்து குமரி கண்டத்தையும் தமிழனையும் இழுக்காதீர்கள்//
சிந்து சமவெளி நாகரீகம், சுமேரிய மேசொபொடமியா நாகரீகங்கள் அனைத்தும் தமிழர்கள் உருவாக்கியவை என்பதை ஆராய்ச்சிகள் மெய்பித்துக் கொண்டு வருகின்றன. உலக வரலாற்றினை தமிழன் இன்றி அமைக்க முடியாது. எனவே தமிழனை நான் இழுக்கவில்லை...தமிழன் ஏற்கனவே அங்கே இருக்கின்றான்...அவனை நான் வெளிக் கொண்டு வர முயல்கின்றேன்...நீங்கள் மறைக்க முயலாதீர். நன்றி!!!

//பொய்யா...நானா...சிரிப்பு தான் நண்பரே வருகின்றது.//

ஐயா வணக்கம், நீங்க பொய்யே சொல்லமாட்டிங்களா என்ன, அவ்வளவு உத்தமரா நீங்க?

சரி விவிலியம்படி குமரி கண்டத்தில் முதல் மனிதன் (ஆதாம்) தோன்றினான் என்றால், அதே விவிலியம்படி எத்தியோப்பியா, அசீரியா, ஆவிலா மற்றும் நோத் ஆகிய தேசங்கள் குமரி கண்டத்தில் காணப்படாமல் மாறாக ஏழு தெங்க நாடு, ஏழு மதுரை நாடு, ஏழு முன்பலை நாடு, ஏழு பின்பலை நாடு, ஏழு குன்ற நாடு, ஏழு குனக்கரைநாடு, ஏழு குறும்பனை நாடு ஆகிய நாடுகள் காணப்படுவதேன், குறைந்தபட்சம் ஒரு நாடாவது விவிலியத்தில் காணப்படாதது ஏன்? சரி குமரி கண்ட நகரங்களான தென்மதுரை, கபடாபுரம், முத்தூர் ஆகிய நகரங்கள் விவிலியத்தில் எங்கேயாவது காணப்படுகிறதா? எனவே நீங்கள் குறிப்பிடும் ஆதாம் படைப்பு விவிலியம்படி குமரி கண்டத்தில் என்பது உண்மையா? இல்லை பொய்யா?

குமரி கண்டத்தில் முதல் மனிதன் தோன்றினான் என்றால் விவிலியம்படி ஏதேன் தோட்டத்தை கடவுள் அங்கு தான் படைத்தாரா என்று கேள்வி கேட்டேன் ஆம் என்று வாய் கூசாமல் சொன்னது உண்மையா? இல்லை பொய்யா?

சரி ஏதேன் தோட்டம் அங்கு படைக்கப்பட்டிருந்தால் நம் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குமரி ஆறு மற்றும் பஃறுளி ஆறு ஆகிய ஆறுகள் பெயர் பைபிளில் காணப்படவில்லை மாறாக பைசோன், கீகோன், இதெக்கேல், ஐபிராத்து ஆகிய ஆறுகள் காணப்படுகின்றன எனவே நீங்கள் குறிப்பிடும் ஆதாம் படைப்பு விவிலியம்படி குமரி கண்டத்தில் என்பது உண்மையா? இல்லை பொய்யா?

சரி விவிலியத்தில் முதல்முதலாக குறிப்பிடும் தேசம் நோத். காயின் குடியேறும் நோத் என்னும் தேசம் எங்கேயாவது குமரி கண்ட வரலாற்றில் எழுதப்பட்டுள்ளதா?

நீங்கள் பொய் சொல்லவில்லை நான் தான் பொய்யான எதிர் கருத்துக்களை கூறுகிறேன் அப்படி தானே...

சரி உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் ஆதாமை தமிழன் என்று நீங்கள் நிரூபிப்பதால் நீங்கள் தமிழர்களிடம் எதிர்ப்பார்க்கும் பலன் என்ன? உலகில் உள்ள அனைவரும் தமிழனின் பரம்பரை என்று சொல்கிறீர்களா? இல்லை கிறிஸ்துவ மதமாற்றத்திற்காக தமிழர்களை பயன்படுத்துகிறார்களா? நீங்கள் ஒரு சமயசார்பற்ற நூலின் மூலம் உலகின் முதல் மனிதன் தமிழன் என நிரூபித்தால் அனைவரும் நம்புவார்கள் ஆனால்... நீங்கள்... என்ன சொல்வது ரொம்ப நன்றி :)

//உலகம் படைக்கப்பட்ட பொழுதே இன்று இருக்கும் அதே வடிவிலா இருந்தது? அப்பொழுதே எதியோபியா என்ற தேசம் இருந்ததா? எத்தியோபியா வெள்ளத்தில் அழிந்ததாக சான்றுகளோ அல்லது செய்திகளோ இருக்கின்றனவா? அப்படி இருக்க அது எவ்வாறு சரியானதொன்றாகும்?//

தெளிவாக கூறுங்கள் ஆதாம் படைக்கப்பட்டபோது எத்தியோபியா தேசம் இருந்ததா இல்லையா?

ஆதாம் படைக்கப்பட்டபோது இருந்த ஆவிலா தேசம் மற்றும் அசீரியா தேசம் நோவாவின் வெள்ள அழிவிற்கு பின்னரும் இருந்தன என்பதை நிரூபிக்க இதோ பைபிளே ஆதாரங்களை அள்ளி கொடுக்கிறது பாருங்கள்.

அசீரியா தேசம்
2 இராஜாக்கள் 18:28, 2 இராஜாக்கள் 18:33, 2 இராஜாக்கள் 19:17, 2 இராஜாக்கள் 19:36, 1 நாளாகமம் 5:6, ஏசாயா 36:13, ஏசாயா 37:18, 2 இராஜாக்கள் 16:9, ஓசியா 11:11 நாகூம் 3:18, எரேமியா 50:17, மீகா 5:6, நெகேமியா 9:32.

ஆவிலா தேசம்
ஆதியாகமம் 25:18

நான் கொடுத்துள்ள ஆதாரங்கள் மிகக்குறைவே இன்னும் பல வசனங்கள் அசீரியா தேசத்தை குறித்து உள்ளன.

//சிந்து சமவெளி நாகரீகம், சுமேரிய மேசொபொடமியா நாகரீகங்கள் அனைத்தும் தமிழர்கள் உருவாக்கியவை என்பதை ஆராய்ச்சிகள் மெய்பித்துக் கொண்டு வருகின்றன. உலக வரலாற்றினை தமிழன் இன்றி அமைக்க முடியாது.//
நீங்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் நாகரீகங்கள் அனைத்தும் தமிழர்கள் உருவாக்கியவை என்பதை மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.

//எனவே தமிழனை நான் இழுக்கவில்லை...//
ஒரு மதச்சார்பான நூலாகிய பைபிளில் உள்ளதை உண்மை என நிரூபிக்க தயவு செய்து குமரி கண்டத்தையும் தமிழனையும் இழுக்காதீர்கள் என்பதே என் கருத்து. ஏன் வேறு தமிழ் நூல்களே இல்லையா தமிழன் தான் முதல்வன் என்பதை நிரூபிக்க.

//தமிழன் ஏற்கனவே அங்கே இருக்கின்றான்...//
உலகின் முதல் மனிதன் தமிழன் சரிதானே. பிறகு எதற்கு தமிழன் அங்கு இருக்கிறான் இங்கு இருக்கிறான் என்று சொல்வது உலகம் முழுவதும் இருப்பதும் தமிழர்களே சரிதானே...

//அவனை நான் வெளிக் கொண்டு வர முயல்கின்றேன்...//
என்னே!!! தமிழ் பற்று ஐயா உங்களுக்கு என்னை புல்லரிக்க வைக்கின்றது... விவிலியம் மூலமாக நீங்கள் தமிழனை வெளிக் கொண்டு வந்த விதம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திருவள்ளுவர் தோமா வந்து சொல்லிகொடுத்து தான் திருக்குறளே எழுதினார் என்று சொன்னீர்களே பாருங்கள் நீங்கள் தமிழனை வெளிக் கொண்டு வர முயன்ற விதம் மீண்டும் என்னை புல்லரிக்க வைக்கின்றது!!!

//நீங்கள் மறைக்க முயலாதீர்//
:) வேடிக்கையாக இருக்கு ஐயா, மறைக்க நான் யார்? நான் மறைத்தாலும் அது மறைந்து விடுமா என்ன? நாகரீகங்கள் அனைத்தும் தமிழர்கள் உருவாக்கியவை என்பதை யாராலும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறேன்.
நன்றி!

//யூத சமயத்தின் கொள்கைக்கு மாறான கிருத்துவின் கருத்துக்கள் தோன்றிய பின் எதற்காக பழைய ஏற்பாடு தொகுக்கப்பட்டு இருக்கின்றது என்பதனைப் பற்றியும் அவர்களுக்கு சிந்தனைகள் இல்லை.//

பழைய ஏற்பாடு இல்லாவிட்டால் புதிய ஏற்பாடிற்கு மதிப்பில்லை என்பது கிறிஸ்துவர்களுக்கு தெரியும்

/ஐயா வணக்கம், நீங்க பொய்யே சொல்லமாட்டிங்களா என்ன, அவ்வளவு உத்தமரா நீங்க?//

ஏதோ நம்மளால முடிஞ்ச அளவுக்குங்க...கடவுள் எங்களை உயர்ந்தவனாகவும் மற்றவர்களை தாழ்த்தப்பட்டவர்களாகவும் படைத்தார் என்று வாய் கூசாமல் பொய் கூறி மக்களை கடவுளின் பேரில் ஏமாற்றும் கூட்டம் போல் நான் கடவுள் நம்பிக்கையற்றவன் கிடையாது. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். எனவே அவன் விடயத்தில் உண்மையையே தேடுகின்றேன். அப்பயணத்தில் பொய்கள் உதவுவது இல்லை.

//நீங்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் நாகரீகங்கள் அனைத்தும் தமிழர்கள் உருவாக்கியவை என்பதை மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.//
அப்பொழுது உலகின் முதல் மொழி தமிழ், முதல் மனிதன் தமிழன் என்று ஏற்றுக் கொள்கின்றீர்களா? பின்னர் சிலர் சமசுகிருதம் தான் உலகின் முதல் மொழி என்று வாய் கூசாமல் ஓயாது கூறிக் கொண்டு அலைகின்றார்களே...அதற்கு என்ன கூறுகின்றீர்கள்?

//நான் மறைத்தாலும் அது மறைந்து விடுமா என்ன? நாகரீகங்கள் அனைத்தும் தமிழர்கள் உருவாக்கியவை என்பதை யாராலும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறேன்.//

சுமேரிய, மேசொபோடமியா, மாயன் மற்றும் இன்ன பிற நாகரீகங்களில் குமரிக் கண்டம் என்ற பெயரோ, 'ஏழு தெங்க நாடு, ஏழு மதுரை நாடு, ஏழு முன்பலை நாடு, ஏழு பின்பலை நாடு, ஏழு குன்ற நாடு, ஏழு குனக்கரைநாடு, ஏழு குறும்பனை நாடு' என்ற பெயர்களோ காணப்படுகின்றதா? பின்னர் எவ்வாறு அவர்களைத் தமிழர்கள் என்றுக் கூறுகின்றீர்கள்?...அவர்கள் தமிழர்கள் என்றால் எங்கிருந்து எங்கே சென்றனர்? அவர்களது இலக்கியங்களில் மதுரை, பக்றுளி ஆறு, போன்ற பெயர்கள் காணப்படுகின்றதா? அவ்வாறு காணப்படாவிடில் பின்னர் எதனை வைத்து நாம் அவர்கள் தமிழர்கள் என்றுக் கூறுகின்றோம்? சற்று விளக்கினீர்கள் என்றால் நலமாக இருக்கும். தங்களின் கூற்றின் படி தமிழன் உலகம் முழுவதும் எந்தக் காலத்தில் சென்று இருந்தாலும் இன்று தமிழகத்தில் வழங்கும் பெயர்கள் எல்லாம் அவர்கள் நினைவிலும் இலக்கியங்களிலும் வைத்து இருக்க வேண்டும் போல தெரிகின்றது. அப்படி இருக்க, இன்று தமிழர்களே உலகம் முழுவதிலும் சென்று பரவி இருக்கும் நிலையில் அனைத்து நாகரீகங்களிலும் அவர்களது இலக்கியங்களிலும் சங்க இலக்கியக் குறிப்புகள் இருக்க வேண்டும். அதனைப் போன்றே அந்த நாகரீகங்களைப் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் இருக்கும் என்றே எண்ணுகின்றேன். அவ்வாறே இருக்கும் என்றே எண்ணுகின்றேன்...அதனை தாங்கள் தெரிவித்தால் மிக்க நலனாக இருக்கும்.

உங்களின் கருத்துப்படி உலகம் முழுவதும் அனைத்து நாகரீகங்களுக்கு மத்தியிலும் ஒரே கதை ஒரே மாதிரியாகத் தான் சுத்திக் கொண்டு இருக்க வேண்டும். சரியா? மேலும் தமிழில் உள்ள கடவுளர் பெயர்களும் மற்ற அனைத்து நாகரீகங்களிலும் உள்ள கடவுளர் பெயரும் ஒன்றாகத் தானே இருக்க வேண்டும்? சரியா?.

//ஆதாம் படைக்கப்பட்டபோது இருந்த ஆவிலா தேசம் மற்றும் அசீரியா தேசம் நோவாவின் வெள்ள அழிவிற்கு பின்னரும் இருந்தன என்பதை நிரூபிக்க இதோ பைபிளே ஆதாரங்களை அள்ளி கொடுக்கிறது பாருங்கள்.//

பழைய ஏற்பாட்டினை மீண்டும் குருட்டுத்தனமாக நம்புகின்றீர்களே நண்பரே... பழைய ஏற்பாடு என்பது யூதர்களுக்காக அவர்களின் வரலாற்றினை அவர்களின் பார்வையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஒன்று. அவை அனைத்தும் உண்மை என்று ஒரு யூதன் நம்பலாம்...நாம் எவ்வாறு நம்ப முடியும்? ஆராய்ச்சி செய்து உண்மையை அல்லவா தேட வேண்டும்? வெள்ளக் கதைகள் ஏற்கனவே அந்தப் பிரதேசத்தில் (சுமேரிய நாகரீகத்தில்) இருந்து இருக்கின்றது என்பதனையும் நாம் கண்டு இருக்கின்றோம். சமுகத்தில் இருக்கும் கதைகள் காலப்போக்கில் மாற்றங்களைப் பெறும் என்பது உலக உண்மை. பழைய ஏற்பாடு என்பது யூத மக்கள் அவர்கள் மத்தியில் கொண்டு இருந்த உலகத் தொடக்கதினைப் பற்றிய கூற்றுகளைக் கொண்டு விளங்கும் ஒரு நூல் அவ்வளவே. அதனை அப்படியே இறவாத் தன்மைக் கொண்ட நூல் என்று யூதன் நம்புவான் (எவ்வாறு வேதம் தான் உயர்ந்தது என்று பிராமணர்கள் கருதுகின்றார்களோ அது போல்)...இல்லை எனில் மூளைச் சலுவை செய்யப்பட்ட கிருத்துவன் நம்புவான்...மாறாக இறைவனை நம்புபவனும் சிந்திப்பவனும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது...அவ்வாறு ஏற்றுக் கொள்பவர்கள் சிந்திப்பவர்களா என்பது கேள்விக் குறியே?

//இல்லை கிறிஸ்துவ மதமாற்றத்திற்காக தமிழர்களை பயன்படுத்துகிறார்களா?//
இதனைக் குறித்து ஒரு பதிவு எழுதியுள்ளேன்...உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்...
http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/09/1.html
http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/09/2_28.html
http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/09/3.html

இன்றைக்கு கிருத்துவினைப் பற்றி அறியாதவர்கள் தான் அரசியல் காரணத்திற்காக மத மாற்றம் செய்வார்கள்...!!!

//நீங்கள் ஒரு சமயசார்பற்ற நூலின் மூலம் உலகின் முதல் மனிதன் தமிழன் என நிரூபித்தால் அனைவரும் நம்புவார்கள் ஆனால்//
குறுகிய கண்ணோட்டத்துடனே காண்பவர்கள் என்றுமே உண்மையையே காண்பதில்லை... நான் ஒரு சமயத்தினை வைத்து மட்டுமே இதனை எழுத வில்லை நண்பரே...சைவ வைணவ சமயங்களையும் வைத்துத் தான் எழுதுகின்றேன்...

இதோ சில ஒற்றுமைகள்...

//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? - I கொரிந்தியர் 6

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. - திருமந்திரம்

//இறவா இன்பத்து எமை இருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்தான். - போற்றிப்பற்றொடை -69

அருளுரு என்ற பொருளினை ஆயின்
மாயா உருவினன் மாயா உருவினை
ஏயான் எய்ந்தவர் எம்ம னோரே - சங்கற்ப நிராகரணம் - 25 - 27

அகலமாய் யாரும் அறிவரி தப்பொருள்
சகலமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற - திருஉந்தியார் 1

போன்ற வரிகள் இறைவன் உலகில் வந்து மனித உருவில் பிறந்தான் என்றுக் கூறுகின்றன...அதனைப் போலவே அவ்வாறு வந்த இறைவன் அவனாகவே அவனைத் தந்தான் என்று கூறுகின்றன.

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
அத்தி பழுத்தது என்று உந்தீ பற
அப்பழம் உண்ணாதே உந்தீ பற - திருஉந்தியார் - 41

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
அத்தி பழுத்த தருளென்னுங் - கத்தியினால்
மோகக் கொடியறுக்க முத்திப் பழம் பழுக்கும்
ஏகக் கொடி எழுங்காண் இன்று' - திருக்களிற்றுப்படியார் - 93

உலகின் முதல் மனிதனுக்கே பாவம் படர்ந்து அவன் துன்பப்பட ஆரம்பித்தான் என்றும் அவ்வாறுப் படர்ந்த பாவத்தை அறுக்கும் ஒருவன் இன்று எழுந்து இருக்கான் என்றும் மேலே உள்ள வரிகள் கூறுகின்றனவே...!!! இதனையே சிவஞானபோதமும் விளக்குகின்றது.

"கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவர்' - திருஉந்தியார் -3
'கள்ளரோடு இல்லமுடையார் கலந்திடில்
வெள்ள வெளியாமென் றுந்தீபற
வீடும் எளிதாமென் றுந்தீபற' - திருஉந்தியார் - 23

அவ்வாறே மேலே உள்ள வரிகளிலும் 'அவரது பணியை இறைவன் கண்டத்தின் மூலம் முடித்து இருப்பதாகவும்...அவர் கள்ளரோடு இல்லமுடையவராக இருக்கின்றார்' என்றும் பொருள் வருகின்றது. இதற்கு விளக்கங்கள் என்ன என்று கூறினாலும் நலம் பயக்கும்.

இன்னும் பல வரிகள் பல விடயங்களை நாம் காணலாம் பேசலாம்...ஆனால் அவற்றை எல்லாம் நாம் பதிவுகளில் கண்டுக் கொண்டு வருகின்றோம். அதனை தாங்கள் புரிந்து படித்து இருப்பீர்களா என்று எனக்குத் தெரியவில்லை.

சுருக்கமாக எனது கருத்து, இறைவன் ஒருவன் அவன் மூன்று நிலைகளில் விளங்குகின்றான்.
மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
சாவம் உள்ளன நீக்குவானைத் தடம் கடல் கிடந்தான் தன்னை
தேவ தேவனைத் தென் இலங்கை எரி எழ செற்ற வில்லியை
பாவ நாசனை பங்கயத் தடம் கண்ணனைப் பரவுமினோ - நம்மாழ்வார் - திருவாய்மொழி (3-6-2)

மூவராகிய ஒருவனை மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை
தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத் தண் திருவயிந்திர புரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்துரைத்த பாவு
தண் டமிழ்ப் பத்திவை பாடிட பாவங்கள் பயிலாவே. - திருமங்கை ஆழ்வார் (3-1-10).

அருவமோ உருவா ரூப மானதோ அன்றி நின்ற
உருவமோ உரைக்கும் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின்
அருவமும் உருவா ரூபம் ஆனது மன்றி நின்ற
உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ள வாமே. - சிவஞானசித்தியார்(1:38)

அதில்,
தந்தை - சிவன்
பிள்ளை - இயேசு
பரிசுத்த ஆவி/இறைவனின் சக்தி - விஷ்ணு/அம்மன்

இதுவே நான் உணர்ந்து இருப்பது...

//ஆதாமை தமிழன் என்று நீங்கள் நிரூபிப்பதால் நீங்கள் தமிழர்களிடம் எதிர்ப்பார்க்கும் பலன் என்ன?//
பலனா...மக்கள் அனைவரும் சமம்...இறைவன் ஒருவனே...எவரும் தாழ்த்தப்பட்டவர்களோ அல்லது உயர்ந்தவர்களோ அல்ல? சாதி ஏற்றத்தாழ்வுகள் என்பது சிலர் அரசியல் நோக்கிற்காக உருவாக்கினதே அன்றி இறைவன் கூறியது அல்ல...இறைவனின் கருத்துக்கள் வெளி வர வேண்டும்...மூட நம்பிக்கைகளிலும், பஞ்சமர், சூத்திரர் என்று பட்டம் சூட்டப்பட்டு உழன்றுக் கொண்டு இருக்கும் தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டும்...மக்களை ஏமாற்றிக் கொண்டு சமயங்களை அடிமையாக்கி வைத்து இருக்கும் மனிதர்களின் கையில் இருந்து சமயங்கள் வெளி வர வேண்டும்...கருவறையினுள் தமிழர்கள் நுழைய வேண்டும்.
http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/09/blog-post_30.html

அவ்வளவே!!!

முதலில் எனக்கு ஒன்றை தெளிவுபடுத்துங்கள், பழைய ஏற்பாடு உண்மையா இல்லை பொய்யா? அதை நம்பலாமா வேண்டாமா? பழைய ஏற்பாட்டிலிருந்து ஆதாம் மற்றும் ஏவாள் என்ற இரு பெயர்கள் மட்டும் (தமிழர்கள் என்பதை நிரூபிக்க) எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றதை எல்லாம் விட்டு விட வேண்டுமா? யூதர்கள் மட்டும் தான் அதை நம்ப வேணுமா? மற்றவர்கள் நம்பகூடாதா?பழைய ஏற்பாடு குறித்து உங்கள் விளக்கத்தை தயவு செய்து கொஞ்சம் கூறுங்கள் பிறகு உங்களுக்கு தேவையான பதிலை கூறுகிறேன்...

//சுமேரிய, மேசொபோடமியா, மாயன் மற்றும் இன்ன பிற நாகரீகங்களில் குமரிக் கண்டம் என்ற பெயரோ, 'ஏழு தெங்க நாடு, ஏழு மதுரை நாடு, ஏழு முன்பலை நாடு, ஏழு பின்பலை நாடு, ஏழு குன்ற நாடு, ஏழு குனக்கரைநாடு, ஏழு குறும்பனை நாடு' என்ற பெயர்களோ காணப்படுகின்றதா? பின்னர் எவ்வாறு அவர்களைத் தமிழர்கள் என்றுக் கூறுகின்றீர்கள்?...அவர்கள் தமிழர்கள் என்றால் எங்கிருந்து எங்கே சென்றனர்? அவர்களது இலக்கியங்களில் மதுரை, பக்றுளி ஆறு, போன்ற பெயர்கள் காணப்படுகின்றதா?//

நீங்கள் புரியாமல் இருக்கிறீர்களா என்று தெரியவில்லை சரி, ஏழு தெங்க நாடு, ஏழு மதுரை நாடு, ஏழு முன்பலை நாடு, ஏழு பின்பலை நாடு, ஏழு குன்ற நாடு, ஏழு குனக்கரைநாடு, ஏழு குறும்பனை நாடு என்பவை குமரி கண்டத்தில் இருந்த நாடுகளின் பெயர்கள் அவ்வளவே. இவை மற்ற நாடுகளில், மற்ற இலக்கியங்களில் எதிர்பார்ப்பது தவறு. ஒரு தமிழன் அமெரிக்காவில் சென்று குடியேறுகிறான் என்று வைத்துக்கொள்வோம், அவன் தமிழனின் வரலாறு எழுதுகிறான் என்றால் தமிழனின் பிறப்பு தமிழ்நாடு என்று எழுதுவானா இல்லை அமெரிக்கா என்று எழுதுவானா சொல்லுங்கள். ஆதாம் என்ற மனிதன் குமரி கண்டத்தில் படைக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக இந்த நாடுகளின் பெயர்கள் குறைந்தபட்சம் ஒரு நாட்டின் பெயராவது பைபிளில் குறிப்பிடபட்டிருக்க வேண்டும் என்பதே என் கருத்து. பைபிளின்படி ஆதாம் என்ற மனிதன் வடகிழக்கு ஆப்பிரிக்கப் பகுதியில் படைக்கப்பட்டான் என்பதே என் கருத்து. பழைய ஏற்பாடு நம்பக்கூடாது என்றால் பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டுள்ள ஆதாம் என்ற மனிதனை மட்டும் எப்படி நம்புவது.

//எதனை வைத்து நாம் அவர்கள் தமிழர்கள் என்றுக் கூறுகின்றோம்? சற்று விளக்கினீர்கள் என்றால் நலமாக இருக்கும்//
ஒரு சில பழக்கவழக்கங்கள், வழிப்பாட்டு முறைகள், தமிழில் உள்ள பெயர்களை வைத்து தான் நாம் அவர்களும் தமிழர்கள் என்று கூறுகிறோம். இந்த http://kalaiy.blogspot.in/2013/01/blog-post.html தொடர் முழுவதும் உள்ள பதிவுகளை படித்தீர்களேன்றால் ஓரளவு உண்மை புரியும் என்று நினைக்கிறேன் ஐயா... தவறாக ஏதாவது கூறியிருந்தால் மன்னிக்கவும், நன்றி...

//குறுகிய கண்ணோட்டத்துடனே காண்பவர்கள் என்றுமே உண்மையையே காண்பதில்லை...//
நான் உண்மைக்கு புறம்பான பொய்யான கருத்துக்களோ அல்லது தவறான கருத்துக்களோ கூறியிருந்தால் மன்னிக்கவும்... என்னுடைய கருத்துக்களில் உண்மை இருக்கிறதென்று நம்புகிறேன் அதனால் தான் உங்களுடன் விவாதிக்கிறேன் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் நான் அதை திருத்திக்கொள்கிறேன் நன்றி...

//தந்தை - சிவன்
பிள்ளை - இயேசு
பரிசுத்த ஆவி/இறைவனின் சக்தி - விஷ்ணு/அம்மன்

இதுவே நான் உணர்ந்து இருப்பது...//

நான் இயேசு கிறிஸ்துவை பற்றி விவாதிக்க வரவில்லை. அதை பற்றி என்னுடைய கருத்துக்கள் வேண்டுமென்றால் சொல்லுங்கள் விவிலியம் மூலம் விவாதிக்க நான் தயாராக உள்ளேன். சரி தந்தை சிவன் என்றால் பிள்ளை முருகன் அல்லது பிள்ளையார் அல்லவா? நீங்கள் எப்படி இயேசுவை கூறலாம்?

இயேசுவிடம் இருந்த சீடர் பவுல் எப்படி கிறிஸ்துவ மதத்தை பரப்பினார் என்பதை அவரே கூறுகிறார் பாருங்கள். "இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோசப்படுகிறேன், இன்னமும் சந்தோசப்படுவேன். பிலிப்பியர் 1:18" இயேசு எப்பொழுது இவருக்கு வஞ்சகமாக மதத்தை பரப்ப கற்றுக்கொடுத்தார்?

//சரி தந்தை சிவன் என்றால் பிள்ளை முருகன் அல்லது பிள்ளையார் அல்லவா?//


1) பிள்ளையார் - ஒருவர் சக்தி பிள்ளையாரை அழுக்கினைக் கொண்டு உருவாக்கியதாக கூறுகின்றார்...மற்றொருவர் சிவன் ஒரு யானையாகவும் சக்தி மற்றொரு யானையாகவும் மாறி பிள்ளையாரைப் படைத்ததாக கூறுகின்றார்...இன்னொரு கருத்தோ பௌத்தர்களால் அழிக்கப்பட்ட சைவர்களை எண்ணி பிள்ளையார் உருவாக்கப்பட்டார் என்று கூறுகின்றார்...ஆனால் இக்கருத்துக்களுக்கு எல்லாம் முன்னரே சமணத்தில் பிள்ளையாரைப் போன்ற தோற்றம் உடைய ஒரு இயக்கன் இருந்து இருப்பது ஏன்? அவ்வாறே புத்தர் இருந்த அரச மரத்தின் அடியில் பிள்ளையார் வந்தது எப்படி? - இவற்றில் எவை உண்மை... என்ன தான் நடந்தது?

2) வரலாற்றுச் சான்றுகளின்படி முருகன் என்றப் பெயர் பிள்ளையாருக்கு முன்னரே காணப்பட்டு இருக்க, எவ்வாறு பிள்ளையார் அண்ணன் ஆனார், எப்படி முருகன் தம்பி ஆனார்?

3) மேலும் பிரமனும் சிவனுக்கும் பெருமாளுக்கும் மகனாக அறியப் பெறுகின்றான். அது ஏன்? பிரமனுக்கும் பெருமாளுக்கும் தொப்புள் கொடி உறவு ஏன்?

//இயேசுவிடம் இருந்த சீடர் பவுல் எப்படி கிறிஸ்துவ மதத்தை பரப்பினார் என்பதை அவரே கூறுகிறார் பாருங்கள். "இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோசப்படுகிறேன், இன்னமும் சந்தோசப்படுவேன். பிலிப்பியர் 1:18" இயேசு எப்பொழுது இவருக்கு வஞ்சகமாக மதத்தை பரப்ப கற்றுக்கொடுத்தார்?//

ஒரு உதாரணத்தினை எடுத்துக் கொள்வோம்..."மக்கள் அனைவரும் சமம்...பிறப்பால் ஏற்றத் தாழ்வு இல்லை...அன்பே சிவம்" என்று கருத்தினை நான் கூறுகின்றேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்... உடனே ஊரினில் சிலர் அக்கருத்துகளை எதிர்ப்பர்...நான் பொய் சொல்கின்றேன் என்றும் கூறுவர்... ஆனால் அவர்கள் கூறுவதற்காக நான் கூறுவது பொய் ஆகி விடுமா அல்லது நான் கூறுவதினை நிறுத்தத் தான் முடியுமா...அந்நிலையில் நான் என்ன கூறுவேன்... " என் கருத்துக்களை அவர்கள் பொய் என்றுக் கருதுகின்றனரா... நல்லது...பிழையில்லை...அவர்கள் பொய் என்றுக் கருதினாலும் அவற்றின் வழியே உண்மையே மக்களைச் சென்றடைகின்றது...அது நல்லது தான்" என்றல்லவா இருக்கும். அதுவே தான் பவுலின் அந்தக் கூற்றுக்கு பொருள்.

நல்லது அனைவருக்கும் நல்லதாக இருப்பதில்லை... அனைவரும் சமம் என்ற உண்மை பலரின் சொகுசு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றால் அது எந்தளவு உண்மையாக இருப்பீனும் அதனை அவர்கள் எதிர்பரா மாட்டாரா?

ஐயா நீங்கள் என்னுடைய கேள்வியை புரிந்து கொண்டீர்களா என்று தெரியவில்லை!!! நான் கேட்ட கேள்வி என்ன? நீங்கள் சொன்ன பதில் என்ன? சிவனுக்கு மகன் மகன் முருகன் இல்லை விநாயகன் அல்லவா நீங்கள் எப்படி இயேசு என்று சொல்லலாம் என்று கேட்டேன் ஆனால் நீங்கள் ஏதேதோ பதில்களை கூறுகிறீகள்...

//1) பிள்ளையார் - ஒருவர் சக்தி பிள்ளையாரை அழுக்கினைக் கொண்டு உருவாக்கியதாக கூறுகின்றார்...மற்றொருவர் சிவன் ஒரு யானையாகவும் சக்தி மற்றொரு யானையாகவும் மாறி பிள்ளையாரைப் படைத்ததாக கூறுகின்றார்...இன்னொரு கருத்தோ பௌத்தர்களால் அழிக்கப்பட்ட சைவர்களை எண்ணி பிள்ளையார் உருவாக்கப்பட்டார் என்று கூறுகின்றார்...ஆனால் இக்கருத்துக்களுக்கு எல்லாம் முன்னரே சமணத்தில் பிள்ளையாரைப் போன்ற தோற்றம் உடைய ஒரு இயக்கன் இருந்து இருப்பது ஏன்? அவ்வாறே புத்தர் இருந்த அரச மரத்தின் அடியில் பிள்ளையார் வந்தது எப்படி? - இவற்றில் எவை உண்மை... என்ன தான் நடந்தது?
2) வரலாற்றுச் சான்றுகளின்படி முருகன் என்றப் பெயர் பிள்ளையாருக்கு முன்னரே காணப்பட்டு இருக்க, எவ்வாறு பிள்ளையார் அண்ணன் ஆனார், எப்படி முருகன் தம்பி ஆனார்?
3) மேலும் பிரமனும் சிவனுக்கும் பெருமாளுக்கும் மகனாக அறியப் பெறுகின்றான். அது ஏன்? பிரமனுக்கும் பெருமாளுக்கும் தொப்புள் கொடி உறவு ஏன்?//

ஆமாம் நீங்கள் கூறுவதுபடி நிறைய முரண்பாடுகள் இருக்கலாம் நான் இல்லை என்று சொல்லவில்லையே... மூன்று கடவுள்கள் வைத்துள்ள கிறிஸ்துவ வேதத்தில் எவ்வளவு முரண்பாடுகள்...அதில் உள்ள முரண்பாடுகளை எண்ண முடியாது சரி தானே? அப்படி இருக்கையில் இந்து மதத்தில் எவ்வளவு முரண்பாடுகள் இருக்கும்!!! இந்து மதத்தில் ஆயிரக்கணக்கான கடவுள்கள் இருக்கிறார்கள் எது எப்படி இருந்தாலும் ஓம் என்னும் ஒரு வார்த்தையில் ஒன்றுபடுவார்கள்... ஆனால் மற்ற மதங்களில் அப்படி இல்லையே ஐயா...

//ஒரு உதாரணத்தினை எடுத்துக் கொள்வோம்..."மக்கள் அனைவரும் சமம்...பிறப்பால் ஏற்றத் தாழ்வு இல்லை...அன்பே சிவம்" என்று கருத்தினை நான் கூறுகின்றேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்... உடனே ஊரினில் சிலர் அக்கருத்துகளை எதிர்ப்பர்...நான் பொய் சொல்கின்றேன் என்றும் கூறுவர்... ஆனால் அவர்கள் கூறுவதற்காக நான் கூறுவது பொய் ஆகி விடுமா அல்லது நான் கூறுவதினை நிறுத்தத் தான் முடியுமா...அந்நிலையில் நான் என்ன கூறுவேன்... " என் கருத்துக்களை அவர்கள் பொய் என்றுக் கருதுகின்றனரா... நல்லது...பிழையில்லை...அவர்கள் பொய் என்றுக் கருதினாலும் அவற்றின் வழியே உண்மையே மக்களைச் சென்றடைகின்றது...அது நல்லது தான்" என்றல்லவா இருக்கும். அதுவே தான் பவுலின் அந்தக் கூற்றுக்கு பொருள்.//

மீண்டும் என்னுடைய கேள்வியை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். சரி மேலே நீங்கள் கூறிய உதாரணம் பவுல் என்பவர் கிறிஸ்துவ மதத்தை "உண்மையினாலாவது, எப்படியாவது" தெரிவித்தார் என்பதற்கு சரியான விளக்கமே... ஆனால் வஞ்சகத்தினாலாவது கிறிஸ்துவ மதத்தை பரப்பினார் என்பதற்கு என்ன பொருள்? மக்களை ஏமாற்றி மதத்தை பரப்பினார் என்று எடுத்துக்கொள்வோமா? அப்படி எடுத்துக்கொண்டால் "இயேசு எப்பொழுது இவருக்கு வஞ்சகமாக மதத்தை பரப்ப கற்றுக்கொடுத்தார்?" என்பதே என்னுடைய கேள்வி...

//நல்லது அனைவருக்கும் நல்லதாக இருப்பதில்லை... அனைவரும் சமம் என்ற உண்மை பலரின் சொகுசு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றால் அது எந்தளவு உண்மையாக இருப்பீனும் அதனை அவர்கள் எதிர்பரா மாட்டாரா? //
ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன் இன்று நம் இந்தியா நாட்டில் வழிபடும் முப்பெரும் மதங்களும் வெள்ளை இன மக்களால் கொண்டு வந்தவையே... இன்றும் கூட மதத்தின் பெயரால் அவர்களுக்கு நாம் அடிமைகளாகவே இருக்கிறோம், அந்த அடிமைத்தனத்தினால் உருவாகப்பட்டவையே ஜாதிகள். இந்து மதத்தில் உள்ள பிராமிணர்கள் மன்னர்களிடம் செல்வங்களை சுரண்டினார்கள், சோழ மன்னர்கள் அரசாட்சி இழந்ததற்கு காரணமே பிராமிணர்கள் என்ற கருத்தும் உண்டு. இன்று கிறிஸ்துவ மதத்தில் காணிக்கை, தசமபாகம் என்ற பெயரில் நேரடியாக மக்களே இந்த பாதிரியார்களால் சுரண்டப்படுகிறார்கள்... "அனைவரும் சமம் என்ற உண்மை பலரின் சொகுசு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்" என்று நீங்கள் கூறிய கருத்துக்கு என்னுடைய ஆதரவு என்றும் இருக்கும்...

//சிவனுக்கு மகன் மகன் முருகன் இல்லை விநாயகன் அல்லவா நீங்கள் எப்படி இயேசு என்று சொல்லலாம் என்று கேட்டேன் ஆனால் நீங்கள் ஏதேதோ பதில்களை கூறுகிறீகள்...//



சிவனுக்குத் தாங்கள் மகனாகக் கூறுவது முருகன் மற்றும் விநாயகரை... ஆனால் பிரமனும், ஐயப்பனும் அவருக்கு மகனாக அறியப்படுபவர்களே...

சிவன் - சக்தி - முருகன், பிள்ளையார்

சிவன் - பெருமாள் - பிரமன், ஐயப்பன்

இவை தான் இந்து சமயத்தில் இறைக் குடும்ப வழிபாடாக அறியப்படுவது. இதன் அடிப்படையில் தான் காலத்தில் ஆறு வகைச் சமயங்கள் எழுந்துள்ளன. ஆனால் எப்பொழுது இந்த இறைக் குடும்ப வழிப்பாட்டு முறை தோன்றியது என்று தாங்கள் கூற முடியுமா?

மேலும் சக்தியின் ஆண் வடிவம் தான் பெருமாள் என்ற நிலையில் இக்குடும்பங்கள் அனைத்தும் ஒருக் குடும்பத்தையே குறிக்கின்றன என ஆகின்றது. இதனைப் பற்றி நான் ஏற்கனவே பதிவுகள் சில எழுதி விட்டதினால் அவற்றைப் பற்றிக் கூறவில்லை. இப்பதிவுகளை படித்தல் நலமாக இருக்கும் என்றே நம்புகின்றேன்...

http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/08/1.html

http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/05/28.html

http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/05/27.html

http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/05/26.html



//ஆமாம் நீங்கள் கூறுவதுபடி நிறைய முரண்பாடுகள் இருக்கலாம் நான் இல்லை என்று சொல்லவில்லையே... மூன்று கடவுள்கள் வைத்துள்ள கிறிஸ்துவ வேதத்தில் எவ்வளவு முரண்பாடுகள்...அதில் உள்ள முரண்பாடுகளை எண்ண முடியாது சரி தானே?//

முரண்பாடுகள் உள்ள சமயங்களை எப்படித் தாங்கள் மெய்யான சமயங்கள் என்றுக் கூறுகின்றீர்? அவைகள் கூறுவனவற்றை எதன் அடிப்படையில் மெய் என்றுத் தாங்கள் கூற இயலும்... முரண்பாடுகள் இருக்கின்றன என்றால் அவை எதனால் வந்தது, மெய் யாது என்று தேட வேண்டுமல்லவா...அதனை விடுத்து முரண்பாடுகளில் குளிர் காய்ந்துக் கொண்டு இருந்தல் இறை நம்பிக்கையாளர் செய்யும் பணியா?



//இந்து மதத்தில் ஆயிரக்கணக்கான கடவுள்கள் இருக்கிறார்கள் //

சைவ சமயமோ...சித்தாந்தங்களோ அவ்வாறு சொல்லவில்லை. முதலில் சைவ வைணவ சமயங்கள் என்ன கூறுகின்றன என்பதனை நன்கு அறிந்துக் கொண்டு வாருங்கள் நண்பரே...

ஒரு இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்பதே அவற்றின் மூலக் கருத்து.


//எது எப்படி இருந்தாலும் ஓம் என்னும் ஒரு வார்த்தையில் ஒன்றுபடுவார்கள்...//

இது எவ்வாறு என்று தாங்கள் கூறினாலும் நன்றாக இருக்கும்... மேலும் இறைவனின் பிள்ளைகளாகிய முருகனும் பிள்ளையாரும் தான் ஓம் என்ற வார்த்தையோடு தொடர்புடையவர்களாக அறியப்படுகின்றனர். இயேசுவும் அவ்வாறே 'வார்தையோடே' தொடர்புடையவராக அறியப்படுகின்றார். இதுவும் ஏன் என்றே சிந்திக்கத் தக்கதாக இருக்கின்றது.

//மீண்டும் என்னுடைய கேள்வியை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.//

தங்களின் கேள்வியை நான் புரிந்துக் கொண்டு தான் விடை அளித்தேன்... ஆனால் பதிலினைத் தான் தாங்கள் புரிந்துக் கொள்ள இயலவில்லை என்றே எண்ணுகின்றேன்...!!!



நான் ஒரு நல்ல செயலினை செய்துக் கொண்டு இருக்கின்றேன்...ஆனால் அது சிலருக்கு கெட்ட செயலாகத் தெரிகின்றது...அந்நிலையில் அவர்கள் அச் செயலை கெட்ட செயல் என்றுக் கூறுவர்...கருதுவர். ஆனால் அவர்கள் கெட்ட செயல் என்றுக் கூறுவதினால் நான் செய்யும் நல்ல செயலை நான் விட்டு விட முடியுமா... அவர்கள் நல்ல செயல் என்றுக் கூறினாலும் அல்லது கெட்ட செயல் என்றுக் கூறினாலும், நான் செயலை தொடர்ந்து செய்துக் கொண்டே இருக்க வேண்டி இருக்கின்றது.



இன்று கோவில் கருவறைக்குள் பிராமணர் அல்லாதோர் செல்லக் கூடாது என்று ஒரு அநியாயச் சட்டம் இருக்கின்றது. இதனை சிலர் ஆதரிக்கவும் செய்கின்றனர். இந்நிலையில் இறைவன் அனைவருக்கும் இறைவனே என்றும் மக்கள் அனைவரும் சமம் என்றும் கூறி கருவறையினுள் நுழைய நான் முயற்சி செய்தால், அதனை சிலர் வரவேற்பர், மற்ற சிலர் இவன் தேவனை எதிர்கின்றான் என்றுக் கூறுவார். அந்நிலையில் அவர்கள் கூறுவதற்காக நான் தேவனை எதிர்பவனாகி விடுவேனா என்ன? அவ்வாறு அவர்கள் கூறினாலும் பிழை இல்லை 'தேவனை எதிர்பதாக இருந்தாலும் மக்கள் அனைவரும் சமம் என்று நிலை நாட்டும்' எனது கடமையை நான் செய்வேன் என்று தானே செய்வேன்...!!!



இதற்கு மேலும் தங்களுக்கு புரியவில்லை என்றால் எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. மன்னிக்கவும்!!!

//ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன் இன்று நம் இந்தியா நாட்டில் வழிபடும் முப்பெரும் மதங்களும் வெள்ளை இன மக்களால் கொண்டு வந்தவையே... இன்றும் கூட மதத்தின் பெயரால் அவர்களுக்கு நாம் அடிமைகளாகவே இருக்கிறோம்,//

சைவ வைணவ சமயங்கள் வெள்ளை இன மக்களால் கொண்டு வரப் பட்டவை என்றா கூறுகின்றீர்? இதனை தாங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.

//அந்த அடிமைத்தனத்தினால் உருவாகப்பட்டவையே ஜாதிகள்.//

மூன்று சமயங்களும் சாதிகளை உருவாக்கினவா? இதையும் தாங்கள் விளக்கினால் நலமாக இருக்கும்...



ஐயா... நீங்கள் கேள்விகள் கேட்கின்றீர் நான் பதில் அளிக்க முயல்கின்றேன்...ஆனால் நான் கேட்ட கேள்விகளுக்கு தாங்கள் இது வரை எந்த பதிலையும் அளிக்கவே இல்லையே... இந்நிலையில் தாங்கள் கூறும் கருத்துக்களை நான் எவ்வாறு அறிந்துக் கொள்ள இயலும்?

//இந்து மதத்தில் உள்ள பிராமிணர்கள் மன்னர்களிடம் செல்வங்களை சுரண்டினார்கள், சோழ மன்னர்கள் அரசாட்சி இழந்ததற்கு காரணமே பிராமிணர்கள் என்ற கருத்தும் உண்டு.//


கிருசுன தேவ ராயர் ஆட்சிக் காலத்தினைப் பற்றி தாங்கள் படித்தீர்கள் என்றால் மேலும் பல விடயங்களைத் தாங்கள் அறிய வரும் என்றே நம்புகின்றேன்.

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

//சிவனுக்குத் தாங்கள் மகனாகக் கூறுவது முருகன் மற்றும் விநாயகரை... ஆனால் பிரமனும், ஐயப்பனும் அவருக்கு மகனாக அறியப்படுபவர்களே...//

சிவனுக்கு இன்னும் பத்து பிள்ளைகள் கூட இருக்கட்டும் ஐயா... இயேசு என்பவர் சிவனின் பிள்ளை என்று எப்படி கூறுகிறீர்ள் என்பதே என் கேள்வி...

//முரண்பாடுகள் உள்ள சமயங்களை எப்படித் தாங்கள் மெய்யான சமயங்கள் என்றுக் கூறுகின்றீர்? அவைகள் கூறுவனவற்றை எதன் அடிப்படையில் மெய் என்றுத் தாங்கள் கூற இயலும்... முரண்பாடுகள் இருக்கின்றன என்றால் அவை எதனால் வந்தது, மெய் யாது என்று தேட வேண்டுமல்லவா...அதனை விடுத்து முரண்பாடுகளில் குளிர் காய்ந்துக் கொண்டு இருந்தல் இறை நம்பிக்கையாளர் செய்யும் பணியா?//

முரண்பாடுகள் இல்லாத சமயங்களே இல்லையே பின்னர் எப்படி அதில் மெய் யாது என்பதை தேட முடியும்.

//சைவ சமயமோ...சித்தாந்தங்களோ அவ்வாறு சொல்லவில்லை. முதலில் சைவ வைணவ சமயங்கள் என்ன கூறுகின்றன என்பதனை நன்கு அறிந்துக் கொண்டு வாருங்கள் நண்பரே...
ஒரு இறைவன் மூன்று நிலைகளில் இருக்கின்றான் என்பதே அவற்றின் மூலக் கருத்து.//
நான் கூறியது கடவுள்களை, கருத்துக்களை அல்ல...
//இது எவ்வாறு என்று தாங்கள் கூறினாலும் நன்றாக இருக்கும்...//
ஓம் என்ற எழுத்தை பயன்படுத்தாத இந்து கடவுள்கள் இருக்க முடியாது...அதனால் அப்படி கூறினேன்...
//இயேசுவும் அவ்வாறே 'வார்தையோடே' தொடர்புடையவராக அறியப்படுகின்றார். இதுவும் ஏன் என்றே சிந்திக்கத் தக்கதாக இருக்கின்றது. //
இதை தாங்கள் விளக்கினால் நலமாக இருக்கும். கிறிஸ்துவர்கள் பயன்படுத்தும் சோத்திரம் என்ற வார்த்தையில் கடைசியாக ரம் என்ற வார்த்தையை ஓம் என்று மாற்ற போகிறீர்கள் அவ்வளவு தானே..:)

//நான் ஒரு நல்ல செயலினை செய்துக் கொண்டு இருக்கின்றேன்...ஆனால் அது சிலருக்கு கெட்ட செயலாகத் தெரிகின்றது...அந்நிலையில் அவர்கள் அச் செயலை கெட்ட செயல் என்றுக் கூறுவர்...கருதுவர். ஆனால் அவர்கள் கெட்ட செயல் என்றுக் கூறுவதினால் நான் செய்யும் நல்ல செயலை நான் விட்டு விட முடியுமா... அவர்கள் நல்ல செயல் என்றுக் கூறினாலும் அல்லது கெட்ட செயல் என்றுக் கூறினாலும், நான் செயலை தொடர்ந்து செய்துக் கொண்டே இருக்க வேண்டி இருக்கின்றது.//
மத மாற்றம் பவுலுக்கு நல்ல செயலாக இருக்கலாம் ஆனால் மற்றவர்களுக்கு அது கேட்ட செயலாக தான் தோன்றும். சரி கேள்விக்கு வருகிறேன் "பவுல் வஞ்சகமாக(ஏமாற்றி) மத மாற்றம் செய்கிறார் சரி தானே ஐயா... இந்த வஞ்சகத்தன்மையை(ஏமாற்றுவதை) இயேசு என்பவர் தன்னுடைய சீடராக இருந்த பவுலுக்கு எப்பொழுது இவருக்கு கற்று கொடுத்தார் என்பதே என் கேள்வி"

//சைவ வைணவ சமயங்கள் வெள்ளை இன மக்களால் கொண்டு வரப் பட்டவை என்றா கூறுகின்றீர்? இதனை தாங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.//
இதை நான் சொல்லவில்லை உங்களுடைய ஒவ்வொரு பதிவும் சொல்கிறது ஐயா... மூஒருமை கோட்பாடு தோமா தான் இந்தியாவிற்கு கொண்டுவந்தார் என்று தாங்கள் தங்கள் பதிவுகளில் போடவில்லையா. கிறிஸ்துவ கருத்துக்கள் சைவ, வைணவ சமயங்களில் உள்ளது என்பதை தாங்கள் கூறவில்லையா. இந்த கருத்துக்களை கொண்டு வந்தவர்கள் வெள்ளையர்களா இல்லை கருப்பர்களா?

//மூன்று சமயங்களும் சாதிகளை உருவாக்கினவா? இதையும் தாங்கள் விளக்கினால் நலமாக இருக்கும்...//
இந்து மதத்தில் பல ஜாதிகள் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே இதனால் பல பிரச்சனைகள், விளைவுகள் நடப்பது அனைவரும் அறிந்ததே. அதே போல கிறிஸ்துவ மதத்தில் பிரிவுகள் பல இருக்கின்றன. ஒரு பிரிவில் இருப்பவர் அடுத்த பிரிவை பார்த்து கேலி, கிண்டல் பண்ணுவது, அவர்களை அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவது இப்படி மதவெறி கிறிஸ்துவ மதத்தின் உள்ளேயே பரவி கிடக்கிறது. அங்கு ஜாதி வெறி இங்கு மதவெறி அது தான் வித்தியாசம். நன்றி...

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு