“நாய்களுக்கு தனி நாடு கேட்கிறதோ…”
பகைவர்களின் வார்த்தை அச்சம்மூட்டவில்லை செல்வனுக்கு.
“இது எங்கள் நாடு” என்றான்.
திடுக்கிட்டாள் யாழினி.
அக்குரல்…!!!
“செல்வன்…” என்றாள் மெலிதாய்.
தளர்ந்தான் செல்வன்.
“யாழினி …. நீயுமா !!!” என்றெண்ணியே திரும்பினான்.
நம்பிக்கை…தைரியமென அவளிடம் கதைக்க அவனிடம் அந்நொடி ஆயிரம் முக்கியமானவைகளிருந்தன.
அவளுக்கோ ஒன்றுதான்.
காதல்…!!!
“செல்வன்….!!!…..நானும் உன்னை காதலிக்கின்றேன்.!!!” என்றோ அவன் தொடங்கிய கதையை முடித்து வைத்தாள்.
“இப்பொழுதினாலா…???”
.
.
“……..எப்பொழுதினிலும்…!!!”
.
.
.
சிரித்தான்….!!!
.
.
.
சிரித்தாள்…!!!
.
.
.
“சுடு..!!!”
.
.
தொலைவில் எங்கோ இரு பறவைகள் மௌனமாயின!!!
 
பி.கு:
 
55 வார்த்தைகளுள் ஒரு கதையினை எழுத வேண்டும் என்ற போட்டிக்காக எழுதியது.

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி