காமிக்ஸ்... இது கற்பனைகளின் சாம்ராஜ்யம்.
சித்திரங்களையும் கற்பனைகளையும் ஒருங்கிணைத்து கட்டப்பட்ட ஒரு மாய உலகம். நல்லவர்களுக்கு முடிவில் நல்லதே நடக்கும் ஒரு அதிசய உலகம். எனவே இதன் பால் நான் இயல்பாக ஈர்க்கப்பட்டதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

இதோ நான் காமிக்ஸ் படிக்க தொடங்கி கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஓடி விட்டன. ஆனால் இன்றும் நான் முதன் முதலில் காமிக்ஸ் படிக்கும் போது வந்த அதே வியப்பும் பரவசமும், புதிதாய் ஒரு காமிக்ஸ் வாங்கி படிக்கும் போதும் தொடர்கின்றது. நான் மாறவில்லையா இல்லை அந்த காமிக்ஸ்கள் மாறவில்லையா...தெரியவில்லை! ஆனால் மாறாமல் இருப்பது நன்று தான் என்று தோணுகின்றது. இதோ இது வரை நான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் போது என் வாழ்வில் ஒரு பாதியாய் அந்த புத்தகங்கள் வீற்று இருப்பதை காண்கின்றேன். அந்த புத்தகங்கள் இல்லை என்றால் என் வாழ்வில் ஒரு பாதி இல்லை என்ணுமாறு அவை இன்றியமையாது இருக்கின்றன. இந்த பதிவு அந்த புத்தகங்களை பற்றியே...

பொதுவாக காமிக்ஸ் என்றாலே அது சிறுவர்களுக்கு தான் என்ற ஒரு தவறான கருத்து நம் நாட்டில் இருந்து கொண்டு வருகின்றது. இது வருத்தம் அளிக்கும் ஒரு விஷயமாகும்.  இந்த புத்தகங்கள் சிறுவர்களுக்கு உரியவை தான்... அதில் சந்தேகமில்லை. ஆனால் வெறும் சிறுவர்களுக்கு மட்டுமே உரியவை அல்ல அவை.... பெரியவர்களுக்குள் இருக்கும் சிறுவர்களுக்கும் அவை உரியவை. உண்மையை சொல்லுங்கள்! உங்களுக்குள் ஒரு சிறுவன் இல்லையா?... மழை பெய்யும் தருணங்களில் நனையும் பொழுதோ, நண்பர்களுடன் மனம் விட்டு சிரிக்கும் பொழுதோ இல்லை பழைய நினைவுகளை நினைக்கும் பொழுதோ உங்களுள் உள்ள அந்த சிறுவனை நீங்கள் உணரவில்லை என்று சொல்லுங்கள்.... என்ன உணர்ந்து இருக்கின்றீர்கள் தானே... இந்த புத்தகங்கள் அவனுக்காக... அவன் சிறுவனாய் இருப்பதற்காக!!! 

படிக்கிறதுக்கு எவ்வளவோ விஷயம் இருக்கிறப்போ இது எதுக்கு நேரத்தை வீணடிக்க என்று நீங்கள் சொல்லாம். வாழ்வில் வெல்ல இவை தேவை இல்லை எனலாம். ஆம்! இவற்றை கொண்டு நாம் வாழ்வை வெல்லப் போவது இல்லை. ஆனால் வாழ்வை வாழ முடியும். மனம் நிறைய சோகம் நிறைந்து இருக்கும் போது நாளை நல்லதாய் விடியும் என்ற நம்பிக்கையும் ஒரு புன்னகையும் தான் வாழ்க்கை என்றால், அந்த புன்னகைகளை கொடுக்கும் வல்லமை இந்த புத்தகங்களுக்கு உண்டு.

நிச்சயமாய் இந்த புத்தகங்கள் இல்லாமல் வாழ்வை வாழ முடியும். ஆனால் இந்த புத்தகங்கள் இருந்தால் வாழ்வை இன்னும் சிறப்பாக வாழ முடியும். அவ்வளவே!!!

தமிழகத்தில் தென் பகுதியில் விருதுநகர் என்னும் ஊரில் இருந்த எனக்கு தென் அமெரிக்காவின் வனங்களையும், மாயன் இனத்தினரை பற்றியும்... வட அமெரிக்காவின் வரலாற்றையும் செவ்விந்தியர்களை பற்றியும்... அறிவியல், மதங்கள், உலக யுத்தங்கள், உலக கலாச்சாரம்  மற்றும் வரலாற்றை பற்றியும் எனக்கு அறிமுகம் செய்து வைத்த இந்த புத்தகங்களுக்கு நான் இறுதி வரை நன்றிக்கடன் பட்டவனாகவே இருப்பேன். இன்று இருக்கும் என்னை செதுக்கிய உளிகளுள் அவையும் முக்கியமானவை.

நான் கண்ட உலகை நீங்களும் காண வேண்டும் என்ற எனது ஆசையின் விளைவாகவே இந்த பதிவு...

கனவு காண்போம்... 

9 கருத்துகள்:

Good attempt to spread the vslue of comics.. Nice one... especially i liked the line below.

"காமிக்ஸ்... இது கற்பனைகளின் சாம்ராஜ்யம்"

this line add more taste to ur blog...

You wrote exactly what you felt. After reading this, somebody will surely start reading comics.

நன்றி கமலேஷ்... நீங்களும் விரைவில் உங்கள் எண்ணங்களை வலைப்பூவில் பதிப்பீர்கள் என்று எண்ணுகின்றேன்... பதிவிற்கு நன்றி

உங்கள் பதிவிற்கு நன்றி ஆதி!!! படிக்க ஆரம்பித்தனர் என்றால் இன்னும் நன்றாக இருக்கும்...

good post, for me also only lion comics and muthu comics introduced South america, and red indians life and american history also, ...

-/ நிச்சயமாய் இந்த புத்தகங்கள் இல்லாமல் வாழ்வை வாழ முடியும். ஆனால் இந்த புத்தகங்கள் இருந்தால் வாழ்வை இன்னும் சிறப்பாக வாழ முடியும். அவ்வளவே! /-

காமிக்சு புத்தககங்களுக்கான நல்ல வரையறை!

"பெரியவர்களுக்குள் இருக்கும் சிறுவர்களுக்கும் அவை உரியவை".

Nicely said. Normally many grown ups dont expose the child inside them thinking that to be foolish. But as u have posted to lead a happy and healthy life the boy in you should come out occasionally. I go with wat u have said. Nice post nagu.

நண்பரே, சென்னைல காமிக்ஸ் புத்தகம் (தமிழில்) விற்கும் இடம் தெரியுமா?

@ இளையராஜா - நண்பரே கீழே உள்ள இணைப்பில் சென்னையில் எங்கெங்கே காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. காண்க!!!

http://tamilcomic.blogspot.com/2011/03/blog-post.html

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி