"அக்கா ஒரு பொம்மை வாங்கிக்கோங்கக்கா". 

எங்க ஊர் பங்குனி பொங்கல் என்றால் ஞாபகத்திற்கு வரும் பல விசயங்களில் இந்த குரல்களும் முக்கியமானவை. பொங்கலை முன்னிட்டு கோவிலைச் சுற்றி புதிதாய் முளைத்திருக்கும் பல கடைகளுள் பொம்மை விற்பவர்கள் தான் பெருன்பான்மையாக இருப்பார்கள். பொம்மை என்றால் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொம்மைகள் அல்ல. அம்மனின் அருள் பெற நமக்கு வேண்டியவர்களுக்காக வேண்டி வைக்கப்படும் பொம்மைகள்.

கை குணமாக கை பொம்மை. காலுக்கு கால் பொம்மை. குழந்தைகளுக்கு சிறுவர் பொம்மை. பெரியவர்களுக்கு அவர்களுக்கு உரிய பொம்மை என்று பல வகையான பொம்மைகளை விற்று கொண்டு இருப்பர்.

"பையனுக்கு கொஞ்ச நாளா உடம்பு சரியில்ல. ஒரு பையன் பொம்மை தாங்கமா." என்றார் ஒரு சிறுவனின் அன்னை.
"என்ன ஆச்சிமா பிள்ளைக்கு?" பல வருடங்களாகவே அந்த அன்னையையும் சிறுவனையும் பொங்கல் அன்று கண்டு பழகி இருக்கும் அந்த கடைக்கார பாட்டி அக்கறையுடன் விசாரித்தார்.
"கொஞ்ச நாளா காய்ச்சல் தொடர்ந்து வந்துகிட்டே இருக்குமா. என்ன பண்றதுனே தெரியல" என்றார் அந்த அன்னை.
"கவலைப்படாதேமா! இந்தா... இந்த பக்கத்துக் கடையில கொஞ்சம் பூவை வாங்கி இந்த பொம்மையில சுத்தி அம்மன் கோவிலுக்குள்ள வச்சிரு... அப்புறம் எல்லாம் அந்த மாரித்தாய் பாத்துப்பா. நீ கவலைப்படாதே" என்று சொல்லி ஒரு பொம்மையை அந்த பாட்டி கொடுத்தார்.
"சரிமா!" என்று அந்த பொம்மையை வாங்கி தன் மகனிடம் கொடுத்தார் அந்த அன்னை.   
"அம்மா... அம்மா... எனக்கு கடிகாரம் வச்ச பொம்மை தான் வேண்ணும்" என்றான் அவன்.
"கடிகாரம் வச்ச பொம்மை தானே ராசா... இந்தா எடுத்துக்கோ " என்று அந்த பாட்டி அவனுக்கு பிடித்த பொம்மையை எடுத்துக் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு ஏதோ ஒரு மகிழ்ச்சியுடன் அவன் கோவிலை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். பின்னால் அவன் அன்னை நம்பிக்கையுடன் நகர ஆரம்பித்தார்.

மேலே சொன்னது போல் பல கதைகளை அந்த பொம்மைகள் சுமந்து கொண்டு தான் அலைகின்றன இன்றும், அந்த பொம்மைகளை சுமப்பவர்களோ ஒரு புது நம்பிக்கையை சுமந்து கொண்டு தான் செல்கின்றனர்.

 "இந்த பொம்மையை வச்சா மட்டும் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்திடுமா? இது எல்லாம் மூட நம்பிக்கையா தெரியில" என்று கேட்டேன். அந்த பாட்டியிடம்.
என்னை அந்த பாட்டி சற்று உற்றுப் பார்த்தார். "நம்ம நல்லா இருப்போம்னு நம்புறது மூட நம்பிக்கையாப்பா?" என்றார்.
"இல்லை!!... ஆனா.."
"யாருக்கும் தீங்கு செய்யாம நமக்கு அந்த நம்பிக்கைய ஒண்ணு தருதுனா அது தப்பாப்பா" அந்த பாட்டி தொடர்ந்தார்.
"இல்லை!!"
"மனுசனுக்கு நம்பிக்கை தான்பா முக்கியம். அந்த நம்பிக்கைய இதுங்க தருதுங்க. இதை போயி மூடநம்பிக்கைனு சொல்லிகிட்டு...நம்ம நல்லா இருப்போம்னு யாருக்கும் எந்த தீங்கும் தராம நம்பிக்கை கொடுக்குற எந்த விஷயமும் மூட நம்பிக்கை இல்லை...!!! அப்புறம் பிரச்சனைகள் தீர்ந்திடுமான்னு கேட்டேல... தீரும் ... தீர்ந்திருக்கு!!!" என்று கூறி முடித்துவிட்டு தன் கடை வேலையை பார்க்க தொடங்கினார் அந்த பாட்டி.
நானும் அந்தக் கடையை விட்டு நகர்ந்தேன் ஒரு தெளிவுடன்...

விருதுநகர் பொங்கல்னா கண்டிப்பா பொம்மைகள் இருக்கும்... அவை இல்லாம பொங்கலா... வாய்ப்பே இல்ல... எனக்கு நம்பிக்கை இருக்கு!!! நம்புவோம்!!!

 நன்றி : புகைப்படங்கள் - சந்தோஷ் குமார்

5 கருத்துகள்:

Ungal Blog-il pommai kadai vaithathil(photo-vil) enaku santhosam :)

பெயரில்லா சொன்னது… 19 ஏப்ரல், 2010 அன்று PM 10:34  

மனுசனுக்கு நம்பிக்கை தான்பா முக்கியம். -- அட்ரா சக்க அட்ரா சக்க.

உங்கள் புகைப்படங்களுக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி சந்தோஷ் ...

Anonymous... உங்கள் பதிவிற்கும் நன்றி

நம்பிக்கையில் நல்லது, கெட்டது இருக்கவேதான் செய்கின்றன. இல்லவிட்டால் மூட நம்பிக்கை என்ற ஒன்றே ஏற்பட்டிருக்காது. தங்கள் கருத்துக்களில் எனக்கு சில முரண்பாடு உண்டு. ஆனால் கொள்கையில் வென்று விட்டீர்கள்! ஆம் ‍ - "மனுசனுக்கு நம்பிக்கை தான்பா முக்கியம் " ‍ ‍!!!

முரண்பாடு இல்லா கருத்துக்கள் உலகில் அரிதே என்று எண்ணுகின்றேன் தோழரே!!!ஆனால் அதே சமயம் நம்பிக்கையில் நல்லது, கெட்டது இருக்கவேதான் செய்கின்றன. உண்மை தான். தங்கள் பதிவிற்கு நன்றி...

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு