வெயில்! எங்கள் ஊருக்கு மிகவும் நெருங்கிய ஒன்று . 'விருதுநகரா? சரியான  பொட்டக்காடாச்சேப்பா' என்று தான்  பலரும் கூறுவர். உண்மையும் அதுதான். கருவேலங்காட்டையும் வெயிலையும் தவிர இயற்கை எங்கள் ஊருக்கு வேறு எதையும் அருளவில்லை. தவறில்லை! எங்கள் ஊருக்கு அவை போதும். அப்படி என்றால் மற்றவை? "அதற்குத்தான் நாங்கள் இருக்கின்றோமே. நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று மார்தட்டிக் கிளம்பிய பறவைக்கூட்டத்தில் நானும் ஒருவன்.
பள்ளி தினங்களில் காலை 8:00 மணி ஆகியும் கலையாத உறக்கம், விடுமுறை தினங்களில் 6:00 மணிக்கே கலைந்துவிடும் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்த பருவம் அது. உணவு உண்பதற்கும் உறங்குவதற்குமே வீடு என்பது எழுதாத விதியாக இருந்த காலம். "டேய்! சாப்பிட்டு போடா" என்ற அன்னையாரின் குரல்களும் "அப்புறம் வந்து சாப்பிடுறேன்மா இப்பவே நேரமாயிடுச்சி"  என்ற எங்களின் பதில்களும் தினசரி வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாய் கலந்திருந்த காலம். இன்றை மட்டும் இன்று காண்போம், நாளையை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்ற வாழ்க்கைத் தத்துவத்தை வாழ்க்கையைப் புரியாமலையே புரிந்து கொண்டிருந்த பருவம்.
பரந்து விரிந்த செம்மண் தளங்களை மைதானங்களாய் எங்களுக்கு தந்த எங்கள் ஊர், வெயில் சற்று கோபமாக இருக்கும் சமயம் நிழலில் இளைப்பாற சில மரங்களையும், மைதானத்தின் எல்லைகளாய் முட்ச்செடிகளையும் சேர்த்தே தந்திருந்தது. "வெயிலோடு விளையாடி" என்றொரு பாடலை ஒரு பாடலாசிரியர் எங்கள் ஊரில் எடுத்த ஒரு படத்திற்காக எழுதி இருந்தார். உண்மைதான். வெயில் இன்றி எங்களின் அநேக விளையாட்டுகள் இல்லை.  வெயில் எங்களுக்கு இன்னொரு நண்பன். வெயில் இருக்கும் வரை நாங்கள் ஆடுவோம், நாங்கள் ஆடும் வரை அவனும் இருப்பான்,எங்களை பார்த்துக்கொண்டே!

4 கருத்துகள்:

அருமையான தொடக்கம்...தொடருங்கள் தோழரே...
//"டேய்! சாப்பிட்டு போடா" என்ற அன்னையாரின் குரல்களும் "அப்புறம் வந்து சாப்பிடுறேன்மா இப்பவே நேரமாயிடுச்சி" என்ற எங்களின் பதில்களும் தினசரி வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாய் கலந்திருந்த காலம்//
உண்மை தோழரே இப்போது நினைத்தாலும் அப்படியே நெஞ்சில் நிற்கும் ஞாபகங்கள்...
உண்மையிலே அநத காலம் ஓரு கனாகாலம்..
இந்த பதிவில் நம்ம ஊரில் நாம் விளையாண்ட விளையாட்டுகளையும் சேர்த்து பதிவு பண்ண விண்ணப்பிக்கிறேன் காரணம் இங்கே பலர் நமது வேர்களை மறந்துவிட்டோம், அவைகளை மீட்டுஎடுக்க உதவும்..வாழ்த்துக்கள்.. ஒரே ஒரு விமர்சனம்..வழக்கமான அல்லது பொதுவான வார்த்தைகளை தவிர்த்துவிட்டு, நமது ஊருக்கே என்று இருக்கும் வழக்கு சொற்களை பயன்படுத்தலாம்...

//வெயில் எங்களுக்கு இன்னொரு நண்பன். வெயில் இருக்கும் வரை நாங்கள் ஆடுவோம், நாங்கள் ஆடும் வரை அவனும் இருப்பான்,எங்களை பார்த்துக்கொண்டே! // அருமை

Ninaivootinaiye nanba..andha pasumporkalngalai..."yenna da yenga pora kalankarthaala..?" yendru amma ketka ..naam..idho ippa vandhudrennu sollitu saaayankalam..varuvomey..aatam potutu...maraka mudiyuma?..Innum innum padhivugalai parimarikollungal yendru en viralkal yen kaniporiyin thatttachai kenjuhirana...

thangal pathirvirkku nandri thozhar sudharsan avargalae....

antha kaalathai thedum pathivugal innum thodarum... vaasiyungal... appadiyae ungal karuthukalaiyum pathi seiyungal...

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு

இன்ட்லி